பாகிஸ்தான் டி20 அணியில் மீண்டும் ஷோயிப் மாலிக்: அப்ரிதி புகழாரம்

By ஏஎன்ஐ


ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரரான ஷோயிப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற ஷோயிப் மாலிக், உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறவி்ல்லை.

இந்நிலையில் ஷோயிப் மசூத் காயம் மற்றும் முதுகு வலிகாரணமாக டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஷோயிப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந் 6 ம் ேததி வடக்கு பஞ்சாப் மற்றும் 7ம் தேதிகளில் மத்திய பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் மசூத் விளையாடியபோது அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது, காயம் தீவிரமாக இருப்பதால், அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, டி20 உலகக் கோ்பபைப் போட்டியிலிருந்து மசூத் விலகினார்.

இதனால் பாகிஸ்தான் டி20 அணிக்கு அனுபவம் நிறைந்த, முன்னாள் கேப்டன் ஷோயிப் மாலிக்கை தேர்வுக்குழுவினர் பரி்ந்துரைத்தனர். 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தவர் ஷோயிப் மாலிக்தான், அந்தப் போட்டியில் கோப்பையை வெல்ல முடியவில்லை,

ஆனாலும், 2009ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மாலிக் தலைமையில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு மே.இ.தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் ஷோயிப் மாலிக் இடம் பெறவில்லை. ஆனால், அதன்பின் நடந்த 2012, 2014, 2016்ம் ஆண்டு தொடரில் ஷோயிப் மாலிக் இடம் பெற்றார்.

ஷோயிப் மாலிக் பாகி்ஸ்தான் அணிக்குள் வந்தது குறித்து முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அப்ரிடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியில் ஷோயிப் மாலிக்கைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனுபவவீரர், மூத்த வீரரான மாலிக், பாகிஸ்தான் அணிக்கு அதிகமாக பங்களிக்கக்கூடிய மிகப்பெரிய காலம். வாழ்த்துகள்”எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்