டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்காக வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். அணியி்ன் பயோ-பபுள் சூழலில் இன்று மாலிக் இணைவார் எனத் தெரிகிறது.
ஜம்முவின் குஜ்ஜார் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் உம்ரான் மாலிக். உம்ரான் மாலிக்கின் தந்தை அப்துல் மாலிக் சிறிய அளவில் காய்கறி, பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
சன் ரைசர்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்ற உம்ரான் மாலிக். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இர்பான் பதானின் வளர்ப்பில், பட்டை தீட்டுதலில் உம்ரான் மாலிக் உருவானவர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் நடராஜன் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டார்.
முதல் ஆட்டத்திலேயே உம்ரான் மாலிக் 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசி கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களை திணறவி்ட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே 3-வது அதிகபட்ச வேகப்பந்துவீச்சாக உம்ரான் மாலிக் பந்துவீச்சு அமைந்தது. இரு போட்டிகளிலேயே உம்ரான் மாலிக் பெயர் பரவலாக அறியப்பட்டது, உம்ரான் மாலிக் பந்துவீச்சை வலைப்பயிற்சியில் டேவிட் வார்னர் விளையாடுவே அஞ்சுவார் பலமுறை பந்து பீட்டன் ஆகும் என்று தகவல்கள் வெளியாகின.
» அடுத்த ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுகிறார்? சென்னையில் பிரியாவிடைக்கு வாய்ப்பு
இதையடுத்து, டி20உலகக் கோப்பைக்கான இந்தியஅணிக்காக வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுையில் “ உம்ரான் மாலிக்கை துபாயில் தங்கியிருக்க கேட்டுள்ளோம். டி20உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்காக வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக உம்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அவரின் பந்துவீச்சு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது, அவருக்கு சிறந்த எதி்ர்காலமும் இருக்கிறது. வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா, கோலிக்கு பந்துவீசும்போது, அவரின் திறமை மேலும் ெமருகேரும்” எனத் தெரிவித்தார்.
உம்ரான் மாலிக்தேர்வு ஏன்?
ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் உம்ரான் மாலிக் அதிகபட்சமாக 153 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். உம்ரான் மாலிக் வீசிய 9-வது ஓவரின் 4-வது பந்தை படிக்கல் சந்தி்த்தார் அந்தப் பந்து படிக்கல் பேட்டை உயர்த்தும் முன் பேட்டில் பட்டு ஒரு ரன் சென்றது. உம்ரானின் இந்த வேகம் அனைவராலும் பேசப்பட்டது.
அதன்பின் ஐபிஎல்டி20 இணையதளத்துக்கு உம்ரான் மாலிக் அளித்த பேட்டியில் “ தொடக்கத்திலிருந்தே வேகமாகத்தான் பந்துவீசினேன். கோஸ்கோ பந்தில் கிரிக்கெட் விளையாடும்போது இன்னும் அதிகமான வேகத்தில் பந்துவீசுவேன்.ஒரு ஓவர் போட்டி விளையாடும்போது அதிகமான யார்கர்களை வீசுவேன். 2018ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான தேர்வில் என்னுடைய பந்துவீச்சை தேர்வாளர்கள் பாரத்தனர்.அப்போது எனக்கு சரியான ஷூ கூட இல்லை என் நண்பர்தான் எனக்கு ஸ்பைக் ஷூ வழங்கினார். என் பந்துவீச்சைப் பார்த்தபின் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வுசெய்யப்பட்டேன்.
23வயதுக்குட்பட்டோருக்கான பிரிவிலும் விளையாடினேன். விஜய் ஹசாரே, ரஞ்சிப் போட்டியில் என்னுடைய பந்துவீச்சைப் பார்த்த சன்ரைசர்ஸ் அணிக்கு எனக்கு வாய்ப்பளித்தனர். பந்துவீச்சில் எங்குதவறு செய்கிறேன், எதை திருத்த வேண்டும் என்பதை இர்பான் பதான் எனக்கு தெரிவித்தார் . வலைபப்யிற்சியில் முதலில் வார்னர்,வில்லியம்ஸனுக்கு பந்துவீச அச்சப்பட்டேன். நல்லபடியாக பந்துவீச வேண்டும் என்று இறைவனிடம் பிரார்திப்பேன்” எனத் தெரிவி்த்தார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago