டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் மேத்யூஸ் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தும் உறுதியாக வீசிய இங்கிலாந்து இலங்கையை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அஞ்சேலோ மேத்யூஸ் 54 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக இருந்தும் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியவில்லை, காரணம் இங்கிலாந்து உறுதியாக பந்து வீசியது.
இந்த வெற்றியினால் தென் ஆப்பிரிக்காவும் சேர்ந்து வெளியேறியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது. இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இலங்கை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் என்று முடிந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி ஓவர் வரை அருமையாக வீசிய பென் ஸ்டோக்ஸ் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். பிளங்கெட் 1 விக்கெட்டையும், டி.ஜே.வில்லே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அடில் ரஷித், மற்றும் மொயின் அலி ஆகியோர் 4 ஓவர்களில் 63 ரன்களை சேர்ந்து விட்டுக் கொடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
இங்கிலாந்து முதலில் மந்தமாக தொடங்கினாலும் கிறிஸ் பட்லர் 37 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட அதிரடி 66 ரன்களை எடுக்க, தொடக்கத்தில் ஜேசன் ராய் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 25 ரன்களையும் மோர்கன் 22 ரன்களையும் எடுத்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 2-வது ஓவரில் ரன் எடுக்காமல் ஹெராத்திடம் எல்.பி.ஆனார்.
அதன் பிறகு ஜேசன் ராய், ஜோ ரூட் 8.3 ஓவர்கலில் 61 ரன்களைச் சேர்த்து உத்வேகம் அளித்தனர். ரூட், ராய் ஆகியோரை வாண்டர்சே பெவிலியன் அனுப்பினார். இரண்டு பந்துமே விக்கெட் விழுவதற்கான பந்து அல்ல. 4-ம் நிலைக்குக் களமிறக்கப்பட்ட பட்லர், பெரேராவின் உதவியினால் ஒரே ஓவரில் 18 ரன்கள் குவித்தார். மேத்யூஸ் உடனே ஷனகாவை கொண்டு வந்தார், ஆனால் பட்லர் அவரை 97மீ சிக்ஸ் ஒன்றை விளாசினார். கடைசி ஓவரில் பெரேரா தனது யார்க்கரைக் கண்டுபிடித்துக் கொள்வதற்குள் இங்கிலாந்து 171 ரன்கள் என்ற ஆரோக்கியமான இலக்கை எட்டியது.
இலங்கை மோசமான தொடக்கம்:
முதல் 8 பந்துகளிலேயே இலங்கை தொடக்க வீரர்களான தில்ஷன், தினேஷ் சந்திமால் ஆகியோர் பெவிலியன் திரும்பினர். டேவிட் வில்லேயின் 3-வது பந்தை திலகரத்ன தில்ஷன் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். ஜோர்டான் பந்தை கட் செய்ய முயன்று சந்திமால் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிலிந்த சிறிவதனா ஷாட் எக்ஸ்ட்ரா கவரைத் தாண்டாமல் கேட்ச் ஆனது. திரிமானே 3 ரன்களில் ஸ்டோக்ஸிடம் ரன் அவுட் ஆக 15/4 என்று இலங்கை சரிவு கண்டது. திரிமானே ரன் அவுட்டுக்குக் காரணமான மேத்யூஸ் அதன் பிறகு அபாரமாக ஆடினார்.
சமர கபுகேதராவுடன் இணைந்து மேத்யூஸ் 10 ஓவர்களில் 80 ரன்களைச் சேர்த்தார். கபுகேதரா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து பிளன்கெட் பந்தில் காலியானார்.
ஆனால் மேத்யூஸ் மொயீன் அலி, மற்றும் அடில் ரஷீத் ஓவர்களில் 4 சிக்சர்களை விளாசினார். திசர பெரேரா 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 ரன்கள் எடுத்தார், கடைசியில் ஜோர்டான் பந்தை மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 16.4 ஓவர்களில் 137/6 என்ற நிலையில் 20 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 34 ரன்கள் என்ற சமன்பாடு இருந்தது. தசுன் ஷனகா இறங்கி 2 பவுண்டரிகள் 1 சிக்சாருடன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார், ஆனால் ஜோர்டான் பந்தில் ஜோ ரூட்டின் அருமையான கேட்சிற்கு இவரும் வெளியேறினார். ஹெராத்தை பவுல்டு செய்தார் ஜோர்டான். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் தேவையில்லாமல் ஸ்டோக்ஸ் பந்தை ஓடி வந்து மெதுவாக வீசுவது என்ற பரிசோதனையிலெல்லாம் ஈடுபடாமல் வெகமாக ஆஃப் கட்டர்களை வீச மேத்யூஸ் வெற்றிக்காக ஆட முடியாமல் போனது. 161 ரன்களில் இலங்கை முடிந்தது.
ஆட்ட நாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago