ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேரடி போட்டிகள், வானொலி வர்ணனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ‘மெகா கவரேஜை’, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளன.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 2021 டி-20 உலகக் கோப்பை போட்டிகளை பிரசார் பாரதி நெட்வொர்க் அதை முழுமையாக ஒலிபரப்பவுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தை கருத்தில் கொண்டு, நேரடி போட்டிகள், வானொலி வர்ணனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ‘மெகா கவரேஜை’, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளன.
அகில இந்திய போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி டிடி ஸ்போர்ட்ஸ் அலைவரிசையில் டிடி ஃபிரீடிஷில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அக்டோபர் 23 முதல், அகில இந்திய வானொலி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து போட்டிகளின் நேரலை வர்ணனையை ஒலிபரப்பும்.
தூர்தர்ஷனில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை காண்பதை மிகவும் உற்சாகமான அனுபவமாக மாற்றும் விதத்தில், மக்கள் பங்கேற்புடன் கூடிய பல நிகழ்ச்சிகளை டிடி ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. ‘கிரிக்கெட் லைவ்’ என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில், சாதாரண மக்கள், கேப்டனின் நிலையில் இருந்து முக்கிய முடிவுகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
‘ஆர்ஜேஸ் கா கிரிக்கெட் ஃபண்டா’ என்பது மற்றொரு சுவாரசியமான விவாத நிகழ்ச்சியாகும், இதில் அகில இந்திய வானொலி ஜாக்கிகள், கிரிக்கெட் நிபுணர்களுடன் இணைந்து டிடி ஸ்போர்ட்ஸில் பொதுமக்களுடன் உரையாடுவார்கள். தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒருங்கிணைப்பின் சிறந்த உதாரணமாகவும், புதுமையாகவும் பிரசார் பாரதியின் இந்த முன்முயற்சி இருக்கும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago