நெருக்கடியைக் கையாளக் கற்றுக்கொண்டால், நாங்களும் டாப் அணிதான் : கே.எல்.ராகுல் நம்பிக்கை

By ஏஎன்ஐ

நெருக்கடியைக் கையாளக் கற்றுக்கொண்டால் நாங்களும் டாப் அணிகளில் ஒன்றாக உருவாகுவோம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 45-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலி்ல் ேபட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த, பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 55 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து(2சிக்ஸர்,4பவுண்டரி) ராகுல் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு 2 புள்ளிகள் கிடைத்திருக்கிறது. ரொம்ப ஸ்மார்ட்டாக விளையாடினோம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு நல்லதாக இருந்ததாக இருந்ததால்,பரிசோதனை முயற்சிகள் ஏதும் அதிகமாகச்செய்யவில்லை.

சிறிது தடுப்பாட்டைத்தைக் கையாண்டோம். அதிகமான சுழற்பந்துவீச்சுக்ுகம் ஒத்துழைக்கவில்லை, பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாகவும் இல்லை.

பேட்டிங்கில் வீரர்கள் ஒவ்வொருக்கும் அவர்களின் பங்கு என்ன என்று கூறப்பட்டிருந்தது. இந்த போட்டியை நாங்கள் வெற்றிகரமாக முடிக்க நினைத்தோம், திட்மிட்டோம். இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளித்து, அதை வளர்க்க உதவும் எனநம்புகிறோம்.

ஹர்பிரீத் பிரார் சிறந்த வீரர் அவரை ப்ளேயிங் லெவனில் சேர்க்க முடியாதது எனக்கு வேதனையாக இருக்கிறது, இந்திய வீரர்களை ஓரம்கட்ட விரும்பவில்லை. ஆனால், வேறு வழியின்றி ஹர்பிரீத் வெளியேஅமரவைக்கப்பட்டார். பயோ-பபுள் சூழலில் இருந்து கிறிஸ் கெயில் வெளியேறியபின் அடுத்த ப்ளேயிங் லெவனை யோசிக்க வேண்டும்.

தமிழக வீரர் ஷாருக்கான் சிறப்பாக வலைப்பயிற்சியில் பேட் செய்தார். முதல்கட்ட சீசனில் எவ்வாறு விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்டத்தை முடிக்கும் கட்டத்தில் களமிறங்கினால் எவ்வாறு ஆட்டத்தை முடிப்பது என பல கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றார். இன்று அவர் முறையான கிரிக்கெட்டை விளையாடி, அருமையான பவுண்டரிகள், சிக்ஸர்களை அடித்தார். ஷாருக்கான அடிக்கும் சிக்ஸர் பெரிதாக இருக்கும் என எங்களுக்குத் தெரியும்.

ப்ளேஆஃப் குறித்து நாங்கள் எங்களுக்குள் அதிகமான அழுத்தத்தை கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் சிறந்த வீரர்கள், அணியினர் என ஒவ்வொருவருக்கும் தெரியும். அதிகமான நெருக்கடியை எங்களுக்குள் கொடுப்பது உதவாது. ஒவ்வொரு போட்டியிலும் கடைசிவரை போராடுவோம். நெருக்கடியை சமாளிக்கக் கற்றுக்கொண்டால் நாங்களும் டாப் அணிகளில் ஒருவராக இருப்போம்
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்