வலுவாக திரும்பி வருவோம் என்று கடந்த ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் முதல்முறையாக சிஎஸ்கே வெளிேயறியபோது தோனி கூறியவார்த்தைகள் இவை. ஆனால், இந்த சீசனில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றை சிஎஸ்கே அணி உறுதி செய்து, வலுவாக திரும்பி வந்துள்ளது.
பிராவோ, ஹேசல்வுட் ஆகியோரின் பந்துவீச்சால், ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில்7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து139 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
» அஸ்வினின் செயல் அவமானம்: மோர்கனுக்கு ஆதரவாக ஷேன் வார்ன் பாய்ச்சல்
» நான் சமாதானத் தூதன்: அஸ்வின் - மோர்கன் மோதல் குறித்த உண்மை என்ன?- தினேஷ் கார்த்திக் விளக்கம்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி சேர்த்த மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும்.
இந்த வெற்றியின்மூலம் சிஎஸ்கே அணி 11 போட்டிகளி்ல் 9 வெற்றிகள், 2 தோல்விகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளேஆஃப் சுற்றையும் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் 11-வது முறையாக சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது.
அதேசமயம் சன்ரைசர்ஸ் அணி 11 போட்டிகளில் 2 ெவற்றிகள், 9 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி நிலையில் இருந்து, இந்த சீசனில் இருந்து வெளியேறுகிறது.இனிமேல் சன்ரைசர்ஸ் அணிக்கு 3 போட்டிகள் இருந்தாலும் அதில் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது.
ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சிஎஸ்கே அணி சென்றுவிட்டதையடுத்து, அடுத்த 3 இடங்களுக்கு 6 அணிகள் கடுமையாகப் போட்டியிடுகின்றன. அடுத்துவரும் ஒவ்வொரு ஆட்டத்தின் வெற்றியும், தோல்வியும் ஒவ்வொரு அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதை பாதிக்கும், வாய்ப்புக் கதவை திறந்துவிடும். ஆதலால், அடுத்துவரும் போட்டிகள் ஸ்வாரஸ்யத்தின் உச்சமாக அமையும்.
சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த சிஎஸ்கே பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை ஆட்டம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் திட்டமிட்டு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய தோனி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விழுவதற்கு வழிவகுத்தார்.
வழக்கமாக 13 ஓவர்களுக்குப்பின் பந்துவீசவே பிராவோவை தோனி அழைப்பார். ஆனால், நேற்றையஆட்டத்தில் 7-வது ஓவரிலேயே பிராவோவுக்கு வாய்ப்புக் கொடுத்தார். ஏனென்றால், சிஎஸ்ேக அணிக்கு எதிராக கேன் வில்லியம்ஸன் நல்ல பேட்டிங் ரெக்கார்ட் வைத்திருப்பதால், விரைவாக விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிராவோவை பந்துவீச தோனி பயன்படுத்தினார்.
அதற்கு ஏற்றார்போல் பந்துவீசிய பிராவோ தான் வீசிய முதல் ஓவரிலேயே வில்லியம்ஸனை(11) கால்காப்பில் வீசி வெளியேற்றினார். 4ஓவர்கள் வீசிய பிராவோ 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜேஸன் ராய் ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதை உணர்ந்த தோனி, அவரின் பலவீனத்தை உணர்ந்து ஹேசல்வுட் எனும் ஆயுதத்தை பந்துவீச அழைத்தார். ஜேஸன் ராய் லென்த் பவுன்ஸரில் பலவீனம் என்பதால் ஹேசல்வுட் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ராய் 2 ரன்னில் வெளிேயறினார். 17வது ஓவரில் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அப்துல் சமது(18), அபிஷேக் சர்மா(18) இருவரையும் ஒரே ஓவரில் ஹேசல்வுட் பெவிலியன் அனுப்பி நெருக்கடியை அதிகரித்தார்.
வில்லியம்ஸன், ஜேஸன் ராய் ஆகிய அனுபவமான பேட்ஸ்மேன்களை வெளியேற்றியதும் சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. அதன்பின் சிஎஸ்கே பந்துவீ்ச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ஸ்கோர் உயராமல் கட்டுக்குள் வைத்தனர்.
தொடக்கத்திலிருந்து அதிரடியாக பேட் செய்து வந்த விருதிமான் சாஹா(44) ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் பறிகொடுத்ததும் சன்ரைசர்ஸ் ரன்ரேட் சரியத் தொடங்கியது.
ஏறக்குறைய 6-வது ஓவர் முதல் 48 ஓவர்வரை சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களால் பவுண்டரி அடிக்க இயலவில்லை. கொல்கத்தா அணி, டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த ஆடுகளம் போன்று இல்லாமல் பேட்டிங்கிற்கு ஓரளவுக்கு சாதகமாகவே நேற்று ஷார்ஜாவில் ஆடுகளம் அமைக்கப்பட்டது. ஆனால், சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களுக்குப்பின் வலுவான பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாததால் ஸ்கோர் உயரவில்லை.
கடைசியில் ரஷித்கான் முடிந்த அளவு போராடி 17 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 2 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. சிஎஸ்கே அணியில்கடைசி வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இந்த ஸ்கோர் சிஎஸ்கே அணிக்கு பெரிதாக இருக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட், டூப்பிளசிஸ் நல்ல தொடக்கம் அளித்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என அடித்து ரன்ரட்டை குறையவிடாமல் கொண்டு சென்றனர்.
டி20 தரவரிசையில் சிறந்த பந்துவீச்சாளர் எனக் கருதப்படும் ரஷித் கான் பந்துவீச்சில் அனாசயமாக சிஸ்கரை விளாசினார் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேன் சர்மாவின் பந்துவீச்சிலும் ஒரு சிக்ஸர் என பறக்கவிட்டார்.
நல்ல தொடக்கத்தை அளித்த கெய்க்வாட் 38 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 75ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த மொயின் அலி 17 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். நிதானமாக பேட் செய்துவந்த டூப்பிளசிஸ் 41 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் வெளிேயறினார். சுரேஷ் ரெய்னா 2 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
103 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 3 விக்கெட்டுகளை 4 ரன்களுக்குள் இழந்தது. தோனி, ராயுடு ஜோடிசேர்ந்தனர். ராயுடு தனது அதிரடி பேட்டிங்கில் ஒருசிக்ஸர், பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி தனக்கேஉரிய ஸ்டைலில் சிக்ஸர் அடித்து ஃபினிஷ் செய்தார். 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago