ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து கோடிக் கணக்கில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திராவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் மியாப்பூர், பூச்சுபள்ளி, கச்சிபவுலி, மைலார்தேவ் பள்ளி ஆகிய பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டம் நடத்திய 23 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் ரொக்கம், மற்றும் லேப்டாப்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.20 கோடி ஆகும்.
இதுகுறித்து ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூகுளில் உள்ள மொபைல் ஆப் மூலம் இந்த சூதாட்டம் நடைபெறுகிறது. இதனால் பலர் பணம், வீட்டுமனைப் பட்டாக்கள், நிலப்பட்டாக்கள் போன்றவற்றை இழக்கின்றனர். ஆதலால், இந்த செயலியை நீக்க வேண்டுமென கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த சூதாட்டம் 4 அடுக்குகளாக பிரித்து நடத்தப்படுகிறது.
இதனை நிர்வகிக்கும் நபர் விஜயவாடாவை சேர்ந்த மஹி என்பவராவார். அவர் தற்போது தலைமறைவாகி உள்ளார். இவருக்கு கீழே 3 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு கீழே மேலும் பலர் என அடுக்கடுக்காக இந்த விவகாரம் நடந்து வருகிறது. கோவா, மும்பை, ஷார்ஜா போன்றநகரங்களில் உள்ள சிலருக்கும் இந்த சூதாட்டத்தில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
இன்றைய ஆட்டம்
சென்னை - ஹைதராபாத்
நேரம்: இரவு 7.30
இடம்: ஷார்ஜா
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago