உ.கோப்பை தகுதிச் சுற்று: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கான்

By இரா.முத்துக்குமார்

நாக்பூரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தகுதிச் சுற்று பிரிவு-பி போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 புள்ளிகள் பெற்று கணக்கைத் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் மொகமத் ஷசாத் (61), அஷ்கர் ஸ்டானிக்சாய் (55 நாட் அவுட்) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. கடைசி 4 ஓவர்களில் 42 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

இத்தனைக்கும் ஸ்காட்லாந்து அணி முன்சி, கொயெட்சர் மூலம் 8.5 ஓவர்களில் 84 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது. ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மடமடவென இழந்து 12.4 ஓவர்களில் 108/4 என்று சரிந்தது. அதன் பிறகு வெற்றியை நோக்கி நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஸ்டானிக்சாய் முதலில் பேட் செய்ய முடிவெடுக்க மொகமது ஷசாத், நூர் அலி சத்ரான் அதிரடியில் இறங்கி முதல் 3 ஓவர்களுக்குள் 25 ரன்கள் அடித்தனர். இந்நிலையில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்த நூர் அலி தேர்ட்மேன் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஷசாத் லெக் திசையிலும் நேராகவும் அடித்து 32 பந்துகளில் அரைசதம் எட்டினார். டி20-யில் இவரது 9-வது அரைசதமாகும் இது.

கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்சாய் களமிறங்கி 2-வது பந்தே சிக்சர் அடித்த பிறகு 10-15 பந்துகளுக்கு ஸ்காட்லாந்து பவுண்டரிகளை அளிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு ஷசாத் தனது அசாத்தியமான பேட்டிங்கினால் 3 சிக்சர்களை விளாசி ஆட்டத்தை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்தார். பிறகு இடது கை ஸ்பின்னர் மார்க் வாட்டை ஷசாத் 2 பவுண்டரிகள் விளாசினார். ஆனால் மீண்டும் ஆக்ரோஷம் காட்டிய போது கேட்ச் ஆனது, ஷசாத் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் வாட்டிடமே ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஸ்காட்லாந்து பவுலிங்கில் கொஞ்சம் திறமையைக் கூட்ட குல்பதின் நயீப், மொகமது நபி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஸ்டானிக்சாய் இறுதி வரை நின்று 50 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தனர். இவரும் தவ்லத் சத்ரானும் இணைந்து கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க ஆப்கன் அணி 170 ரன்களை எட்டியது.

ஸ்காட்லாந்து அதிரடி தொடக்கம் வீண்:

ஆப்கனை விட ஸ்காட்லாந்து தொடக்கம் அதிரடியாக அமைந்தது. முன்சீ, கொயெட்சர் இருவரும் தாக்குதல் ஆட்டம் ஆடினர், தங்கள் இஷ்டப்போக்கில் பவுண்டரிகளை அடித்தனர். கொயெட்சர் 3 வது ஓவரில் சிக்ஸ், பவுண்டரி அடிக்க முன்சி அடுத்த 2 ஓவர்களில் 6 பவுண்டரிகளை விளாசினார். இதனால் பவர் பிளேயில் 60/0 என்று இருந்தது ஸ்காட்லாந்து லெக் ஸ்பின்னர் ரஷித் கானை கொண்டு வந்தும் அவரையும் 9 ரன்கள் அடித்தனர் ஸ்காட்லாந்து தொடக்க வீரர்கள்.

கடைசியில் மட்டரகமான ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து கொயெட்சர் 27 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து சமியுல்லா ஷென்வாரியிடம் அவுட் ஆனார். அடுத்ததாக லெக் ஸ்பின்னர் ரஷித் 29 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து அச்சுறுத்திய முன்சியை எல்.பி. செய்தார். கேலம் மெக்லியாட் 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரஷித் மீண்டும் ரிச்சி பெரிங்டன் என்ற வீரரை ஸ்டம்ப்டு முறையில் வெளியேற்றினார். இடது கை ஸ்பின்னர் அமீர் ஹம்சா ரன் விகிதத்தை கட்டுப்படுத்தினார். ஸ்டம்புக்கு நேராக வீசும் உத்தியில் ஆப்கான் ஸ்பின்னர்கள் வெற்றி பெற்றனர்.

ஸ்காட்லாந்தின் மேட் மச்சன் 25 பந்துகளைச் சந்தித்தும் பவுண்டரி அடிக்க முடியவில்லை கடைசியாக அவர் சிக்சர் ஒன்றை 18-வது ஓவரில் அடித்தும் தேவைப்படும் ரன் விகிதம் எகிற ஸ்காட்லாந்து நல்ல தொடக்கத்தை வீண் செய்து 156 ரன்களுக்கு முடங்கி தோல்வி தழுவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்