அஸ்வினின் செயல் அவமானம்: மோர்கனுக்கு ஆதரவாக ஷேன் வார்ன் பாய்ச்சல்

By ஏஎன்ஐ


ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல் அவமானதுக்குரியது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.

பொதுவாக பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் மரபாகும், விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைபிடிக்கப்படுகிறது. மன்கட்அவுட் செய்யும் முன் நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும்.

ஆனால், விதிமுறையில் எச்சரிக்கை செய்ய வேண்டியஅவசியமில்லை. ஆனால், மரபை சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர்கடைபிடிப்பதில்லை.

டிம் சவுதி வீசிய 20ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார், அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார்.இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

மோர்கன், அஸ்வின் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து தினேஷ் கார்த்திக் போட்டி முடிந்தபின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ ராகுல் திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிந்தபோது அது ரிஷப் பந்த் உடலில் பட்டது. ஆனால், மறுமுனையில் இருந்த அஸ்வின், 2-வது ரன்னுக்கு ரிஷப் பந்த்தை அழைத்து ஓடினார்.

ஒரு வீரர் உடலில் பந்துபட்டுவிட்டால், அடுத்த ரன் ஓடக்கூடாது என்று கிரிக்கெட்டில் எழுதப்படாத மரபு, கிரிக்கெட்டின் தார்மீகப்படி ஓடமாட்டார்கள். ஆனால், அஸ்வின் 2-வது ரன் ஓடியதை மோர்கன் வரவேற்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். இது கிரிக்கெட் விதிகளில் கூறப்படவில்லை என்றாலும், கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதுபற்றி விவாதித்தால் பலசுவாரஸ்யங்களைப் பேசலாம்.

என்னைப் பொறுத்தவரை என் கருத்து என்பது, அந்த நேரத்தில் நான் ஒரு சமாதானத் தூதராகச் செயல்பட்டேன். இப்போதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
ஆனால், அஸ்வின் இதுபோன்றுசர்ச்சையில் சிக்குவது முதல்முறை அல்ல, கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லரை மன்கட் அவுட் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

ஆஸ்திரேலிய லிஜெண்ட் ஷேன் வார்ன் அஸ்வின் 2-வது ரன் ஓடிய செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தத் விவகாரத்தாலும், அஸ்வினாலும் இந்த உலகம் பிளவுபடக்கூடாது. சுருக்கமாகச் சொல்வதென்றால், அஸ்வின் செயல் அவமானம், இதுபோல் ஒருபோதும் நடக்கக்கூடாது. ஏன் அஸ்வின்மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஆளாகிறார். கொல்கத்தா கேப்டன் மோர்கனுக்கு அஸ்வின் மீது குற்றம்சாட்ட ஒவ்வொரு உரிமையும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்