எங்கள் அணி வீரர்கள் தங்களின் பங்கு என்ன, பொறுப்புகள் என்ன என்பதைப் புரிந்துகொண்டு விளையாடினார்கள், அவர்களின் கடின உழைப்பு வெற்றிக்கு காரணம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி புகழாரம் சூட்டினார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது.
157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள், அணியில் தங்களின் பங்கு என்ன, பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு விளையாடுகிறார்கள். இங்குள்ள 3 மைதானங்களுமே வித்தியாசமானவை. இதில் ஷார்ஜா மைதானம் மிகவும் மெதுவான ஆடுகளம்.துபாய், அபுதாபி ஆடுகளம் வேறுபட்டவை. அதற்கு ஏற்றார்போல் வீரர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்
டாஸ் வென்றபோது இங்கு பனிப்பொழிவு இருந்தது. அதனால்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தோம். எப்போதெல்லாம் பனிப்பொழிவு இருக்கிறதோ அப்போது நாங்கள் 2-வது பேட்டிங் செய்யவே விரும்புவோம்.
ஆர்சிபி அணி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள், ஆனால், 9வது ஓவருக்குப்பின் ரன்ரேட் குறையத் தொடங்கியது. இன்னும் நாங்கள் நெருக்கடி கொடுத்து பந்துவீசியிருக்கலாம். இதில் படிக்கல் ஒருமுனையில் பேட்டிங் செய்தபோது, ஜடேஜாவின் பந்துவீச்சு முக்கியமானதாக இருந்தது.
பிராவோ, ஜோஷ், ஷர்துல், தீபக் சஹர் ஆகியோரின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. எந்த பந்துவீச்சாளர் எந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தலாம் என்பது மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
தேநீர் இடைவேளைக்கு முன்பாக மொயின் அலியிடம், நீங்களும் விரைவாக பந்துவீச வேண்டியது இருக்கும். கோலி, படிக்கல் ஜோடியைப் பிரிக்க முடியவில்லை எனத் தெரிவித்தேன்.
ஆர்சிபி தொடக்கம் வலுவாக இருந்தது. ஆனால், பிராவாவோவுக்கு வாய்ப்புக் கொடுக்க முடிவுசெய்தேன். பிராவோவுக்கு பந்துவீச தாமதித்தால் கடினமான நேரத்துக்கும், கடைசி ஓவர்களை வீசவும் அவர் தேவை என்பதற்காகவே நிறுத்திவைப்பேன்.
இந்த ஆடுகளத்தில் தடுப்பு ஆட்டம் ஆடுவது கடினமானது, ஆனால், ஆர்சிபி அணி அதிகமான பவுண்டரிகளை அடித்தார்கள். இந்த ஆடுகளத்தில் வலது, இடது பேட்ஸ்மேன்கள் கூட்டணி முக்கியமானது. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்கள் பணியை உணர்ந்து விளையாடுவார்கள் என்ற நினைக்கிறேன். அதனால்தான் வலது, இடது பேட்டிங் வரிசையில் வீரர்களை களமிறக்கினோம்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago