தாதா என் ஹீரோ; கங்குலியைப் பார்த்துதான் இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன்: கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் உற்சாகம்

By ஏஎன்ஐ


என் பேட்டிங் சிறப்பாக மாறியதற்கு தாதா கங்குலிதான் காரணம். கங்குலியைப் பார்த்தபின்புதான் இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 34-வதுலீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 29 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் 53 ரன்களும், திரிபாதி 74 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். இதில் இடதுகை ஆட்டக்காரர் வெங்கடேஷ் தனது முதலாவது அரைசதத்தை நிறைவுசெய்தார்.

இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் பிசிசிஐ டிவிக்கு அளித்த பேட்டியில் வெங்கடேஷ் ஐயர் கூறியதாவது:
நேர்மையாகச் சொல்கிரேன் கொல்கத்தா அணியில்தான் எனக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

ஏனென்றால், தாதா(கங்குலி) என் ஹீரோ, கேகேஆர் அணிக்கு தாதா கேப்டனாக இருந்ததால் அந்த அணிக்குச்செல்ல விரும்பினேன். அதேபோல கொல்கத்தா அணி என்னை விலைக்கு வாங்கியபோது எனக்கு கனவுபோல் இருந்தது. என்னை ஒவ்வொருவரும் வாழ்த்தினார்கள், அதிகமான பரிசுகளை அளித்தார்கள்.

நான் தாதாவின் மிகப்பெரிய ரசிகன். உலகளவில் தாதாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவன். என்னுடைய பேட்டிங்கை மாற்றியதிலும், மெருகேற்றியதிலும் மிகப்பெரிய பங்கு தாதாவுக்கு உண்டு.

நான் முதலில் வலது கை பேட்டிங்கில் பழகினேன்.ஆனால் கங்குலியின் பேட்டிங்கைப் பார்த்து இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன், கங்குலி போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அவர்அடிக்கும் சிக்ஸர், பவுண்டரி போன்று அடிக்க பயிற்சி எடுத்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் தெரியாமல் மிகப்பெரிய பங்கு கங்குலி்க்கு உண்டு. என்னுடைய வாய்ப்புக்காக உண்மையில் காத்திருந்தேன், எனக்கு வாய்ப்பு கிைடக்கும் என எனக்குத் தெரியும்


இவ்வாறு வெங்கடேஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE