ஆக்ரோஷமான கிரிக்கெட்டை அச்சமில்லாமல் விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தோம் அதை கடந்த இரு போட்டிகளாகச் செய்திருக்கிறோம். இதைத்தான் பயிற்சியாளர் பிரன்டம் மெக்குலம் எதிர்பார்த்தார்
அதைச்செய்திருக்கிறோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 34-வதுலீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 29 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் நிகரரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் 53 ரன்களும், திரிபாதி 74 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஒயின் மோர்கன் காணொலி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இதுபோன்ற ஆக்ரோஷமான கிரிக்கெட்டைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஓய்வறையில் இருப்போர் அனைவரும் ஏதாவது ஒருவகையில் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த ஆக்ரோஷமான கிரிக்கெட்டைத்தான் கடந்த 2 போட்டிகளாக நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம் அதற்குரிய திறமையான வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்.
சிலர் அதிரடி ஆட்டத்தை ஏன் விளையாட வேண்டும் என்று ரிஸ்க் எடுக்க தயங்குவது எனக்குத் தெரியும். ஆனால், முயற்சி எடுத்தபின், இதுதான் நாங்கள் எதிர்பார்த்த கிரிக்கெட் என்பது தெரிந்துவி்ட்டது இனிமேல் இப்படிப்பட்ட ஆட்டம்தான் இருக்கும். அற்புதமான பேட்டிங், பந்துவீச்சு கொண்ட வீரர்கள் அணியில் உள்ளனர்.
வெங்கடேஷ் ஒருவரின் பேட்டிங் ஒட்டுமொத்த அணியின் தோற்றத்தை மாற்றிவிட்டது என்று நினைக்கவில்லை. கடந்த2 போட்டிகளில் சூப்பர் ஸ்டார்களாக இருந்தது பந்துவீச்சாளர்கள்தான். எங்களின் தொடக்க ஆட்டக்காரர்களை அவர்களின் பாணியில், இயல்பாக விளையாட நாங்கள் அனுமதித்தோம்.50 ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவ வீரர் போன்று வெங்கடேஷ் ஆட்டம் இருந்தது.
அவருக்கு நாங்கள் கொடுத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து இதே ஃபார்மில் வெங்கடேஷ் விளையாட வேண்டும், ஆனால், ஒருவீரர் மட்டும் இப்படி விளையாடக் கூடாது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டது போன்று பேட்ஸ்மேன்களும் ஒத்துழைத்து விளையாட வேண்டும்.
திறமையான, தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் என்றால், அவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமில்லாத ஆடுகளத்தில்கூட பந்துவீசக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அபுதாபி ஆடுகளத்தில் இதற்கு முன் இரு போட்டிகளில் விளையாடி இருக்கிறோம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உயர்ந்த தரத்திலான சுழற்பந்துவீச்சை வெளிப்படுத்தியிருக்கிறோம் என்பதில் பெருமையாக இருக்கிறது
இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago