தரம்சலாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை, நியூஸிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களே எடுத்தது. ஆனால் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 7-வது ஓவரில் 51/1 என்று வலுவாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு ஸ்மித், கவாஜா, வார்னர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 51/1 என்பதிலிருந்து 66/4 என்று ஆனது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மீண்டும் போட்டிக்குள் வந்ததற்கு சாண்ட்னர், ஐ.எஸ். சோதி ஆகியோரது அபாரப் பந்து வீச்சும் அற்புதமான பீல்டிங்கும் காரணமாகும். கடைசியில் பிடித்த கேட்ச்கள் நெருக்கடி தருணங்களில் கடினமான கேட்ச்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பலவீனம் மீண்டும் வெளிப்பட்டது. இதுதான் அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். அதனை நியூஸிலாந்து நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.
143 ரன்கள் இலக்கைத் துரத்த உஸ்மான் கவாஜாவும் ஷேன் வாட்சனும் களமிறங்கினர். கோரி ஆண்டர்சன் பந்து வீச்சை தொடங்க கவாஜா மிட்விக்கெட் மற்றும் கவர் திசையில் இரண்டு அருமையான பவுண்டரிகளை அடிக்க முதல் ஓவரிலேயே 11 ரன்கள் வந்தது. பிறகு ஆடம் மில்ன வீசிய 2-வது ஓவரில் மிட் ஆனில் ஒரு தூக்கி அடித்த பவுண்டரியும், ஒரு கட் ஷாட் பவுண்டரியும் விளாசினார் கவாஜா.
3-வது ஓவர் பந்து வீச்சு மாற்றப்பட்டு கிராண்ட் எலியட் கொண்டு வரப்பட்டார், ஆனால் கவாஜா, வாட்சன் ஆகியோர் முறையே ஆஃப் திசையில் 2 பவுண்டரிகள் விளாச அந்த ஓவரில் 10 ரன்கள் வந்தது. மெக்லினாகன் அடுத்த ஓவரில் ஒரு இன்கட்டரில் கவாஜாவின் பேடைத் தாக்கினார். அவுட்டுக்காக கதறினார், ஆனால் அது நாட் அவுட். அடுத்த பந்தே பவுண்டரி பறந்தது. பிறகு ஆண்டர்சன் ஒரு ஓவரை சிக்கனமாக வீச 5 ஓவர்களில் 42/0. இதில் கவாஜா 20 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 31 நாட் அவுட்.
6-வது ஓவரை மெக்லினாகன் வீச வாட்சன் 13 ரன்களில் ஸ்லோ பந்தை மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார்.
சாண்ட்னர் ஏற்படுத்திய திருப்பு முனை:
இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னர் அழைக்கப்பட்டார். இவர் காலங்காலமாக டேனியல் வெட்டோரி செய்ததை இன்றும் செய்தார். 6 ரன்கள் எடுத்த ஸ்மித் மேலேறி வந்து பிளைட் பந்தை ஆட முயல பந்து பிட்ச் ஆகி வெளியே திரும்ப லூக் ரோங்கி ஸ்டம்ப்டு செய்தார். சாண்ட்னர் 1 ஓவர் 2 ரன்கள் 1 விக்கெட்.
இடையில் வார்னர், கவாஜாவுக்கு வில்லியம்சன், கிராண்ட் எலியட் சிக்கனமான ஓவர்களை வீசினர். இதில் நெருக்கடி அதிகரித்தது. எலியட்டின் ஓவரில் 27 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த கவாஜா ரன் அவுட் ஆனார். நேராக ஒரு ஷாட்டை வார்னர் அடிக்க 2-வது ரன்னை முயற்சி செய்தனர். ஆனால் டீப்பிலிருந்து அருமையான பீல்டிங் மற்றும் த்ரோவை மில்ன செய்ய கவாஜா ரன் அவுட் ஆனார்.
மேக்ஸ்வெல் களமிறங்க, பதட்டம் அதிகரித்தது. ஆனால் ஐ.எஸ்.சோதி என்ற லெக் ஸ்பின்னர் மேக்ஸ்வெல், வார்னர் ஆகியோருக்கு அருமையான முதல் ஓவரை வீசி 4 ரன்களே கொடுத்தார். 11-வது ஓவரில் மீண்டும் இடது கை ஸ்பின்னர் சாண்ட்னர் அழைக்கப்பட வார்னர் பெரிய புல் ஷாட்டை முயன்று டீப் மிட்விக்கெட்டில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார்.
மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெலுடன் இணைந்தார். 71/4 என்ற நிலையில் 8 ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு 72 ரன்கள் தேவை என்றானது. மில்ன வீச அழைக்கப்பட இன்சைடு எட்ஜில் மேக்ஸ்வெல் 2 அதிர்ஷ்ட பவுண்டரிகளை அடித்தார். அந்த ஓவரில் 14 ரன்கள் வந்தது. ஆனால் 14-வது ஓவரை சோதி மீண்டும் சிறப்பாக வீசினார், அவரது லெக்ஸ்பின்கள் நன்றாகத் திரும்பியது இதனால் மார்ஷ், மேக்ஸ்வெல் திணற 4 ரன்களே அந்த ஓவரில் எடுக்க முடிந்தது.
36 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில் சாண்ட்னரை, மேலேறி வந்து மிட்செல் மார்ஷ் லாங் ஆஃப் திசையில் 101 மீ நீள சிக்ஸ் விளாசினார்.
அடுத்த ஓவரில் அபாய வீரர் மேக்ஸ்வெலை, சோதி வீழ்த்தினார். தூக்கி அடித்தார், ஆனால் வில்லியம்சனின் நல்ல களவியூகத்தினால் அது எக்ஸ்ட்ரா கவரில் வில்லியம்சன் கையில் கேட்ச் ஆக, மேக்ஸ்வெலின் திருப்தியற்ற இன்னிங்ஸ் அவரது சொந்த எண்ணிக்கையான 22 ரன்களில் முடிவுக்கு வந்தது.
16 ஓவர்களில் 101/5 என்ற நிலையில் சாண்ட்னர் 17-வது ஓவரை வீச வந்தார், அது சிறு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அந்த ஓவரில் மார்ஷ் ஒரு பெரிய சிக்சரையும் ஆஷ்டன் ஆகர் ஒரு பெரிய சிக்சரையும் அடிக்க நியூஸிலாந்துக்கு அழுத்தம் அதிகரித்தது.
ஆனால் மீண்டும் ஐ.எஸ். சோதி தனது 4-வது, கடைசி, ஓவரை மிகச்சிறப்பாக வீசி 5 ரன்களையே கொடுக்க 12 பந்துகளில் 22 ரன்கள் என்ற சமன்பாடு நிலவியது.
இந்நிலையில் 19-வது ஓவரை மெக்லினாகன் வீச, 24 ரன்கள் எடுத்த அபாய வீரர் மிட்செல் மார்ஷ், ஸ்லோயர் பந்தை தப்பாக அடிக்க லாங் ஆனில் மில்னவிடம் கேட்ச் ஆனது. அதே ஓவரில் 9 ரன்கள் எடுத்த ஆகர் புல் ஆட மிட்விக்கெட்டில் ராஸ் டெய்லர் 15 அடி தூரம் ஓடி வந்து தாழ்வாக அருமையாக கேட்ச் பிடித்தார்.
கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில், கோரி ஆண்டர்சன் 2 ரன்களில் பாக்னரை வீழ்த்தினார், இதுவும் கப்தில் பிடித்த அருமையான கேட்ச் ஆகும். இடையில் நெவில் ஒரு எதிர்பாராத சிக்ஸ் அடித்தார். கடைசியில் கூல்டர் நைல் பவுல்டு ஆக ஆஸ்திரேலியா 8 ரன்கள் குறைவாக முடிந்து தோல்வி தழுவியது.
நியூஸிலாந்து அணியில் மெக்லினாகன் 3 ஒவர்களில் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார். சாண்ட்னர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, உண்மையில் அற்புத பவுலிங் என்றால் லெக் ஸ்பின்னர் ஐ.எஸ்.சோதிதான். இவர் 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு 2 பெரிய திமிங்கிலங்களை நியூஸிலாந்து வீழ்த்தியதை வைத்துப் பார்க்கும் போது ஒரு வேளை....
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago