துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யரும், சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சாஹாவும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி ஏறக்குறைய தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு வந்துள்ளது.
இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் ஸ்ரேயாஸ் அய்யர் பங்கேற்கவில்லை. இதனால் ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.
» ஐபிஎல்; ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று: இன்றைய போட்டி நடைபெறுமா?
» ஆர்சிபியின் விசுவாசி; கோலியின் புதிய மைல்கல்: 9 சுவாரஸ்யத் தகவல்கள்
2-வது பாதியில் கேப்டன் பொறுப்பு வழங்காவிட்டாலும் சக வீரராக முதல் ஆட்டத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் களமிறங்கி ஸ்ரேயாஸ் அய்யர் 4 ஆயிரம் ரன்களை அடித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யரின் சாதனையைப் பாராட்டி டெல்லி அணி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாங்கள் உங்களை நேசிக்கிறோம் ஸ்ரேயாஸ். 4 ஆயிரம் ரன்கள் மிகப்பெரிய மைல்கல். அதை அடைந்த உங்களுக்கு வாழ்த்துகள்’’ எனப் பாராட்டியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா நேற்றைய ஆட்டத்தில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தாலும் புதிய மைல்கல்லை எட்டினார். ஐபிஎல் தொடரில் 2 ஆயிரம் ரன்கள் எனும் மைல்கல்லை சாஹா எட்டினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “எங்களின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருதிமான் சாஹா ஐபிஎல் தொடரில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்துவிட்டார். ஆரஞ்ச் ஆர்மி, ஆரஞ்ச் ஆர் நத்திங்” எனத் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago