ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இன்று ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோதவுள்ள நிலையில் அந்த அணியின் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 27 நாட்கள் நடக்கும் போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், சமூக இடைவெளி, முககவசம் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
» ‘‘எனது அமெரிக்க பயணம்; உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்த முடியும்’’ - பிரதமர் மோடி நம்பிக்கை
» அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி: குவாட் மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கிறார்
இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று 33-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் , முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகிறது. இந்தநிலையில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அந்த அணியின் மற்ற வீரர்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. எனினும் அவருக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் ஐபிஎல் வீரர்கள் பலருக்கும் கோவிட் பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்தது.
எனினும் போட்டி துபாயில் திட்டமிட்டபடி டெல்லி கேபிடல்ஸ் அணியும் , முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதும் போட்டி நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago