கிரேம் ஸ்மித் ஓய்வு பெற்றதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக ஹஷிம் ஆம்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹஷிம் ஆம்லா தலைமையில் இலங்கையை முதலில் எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா. ஏ.பி. டிவிலியர்ஸ் தொடர்ந்து ஒருநாள் அணி கேப்டனாகவும் டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாகவும் நீடிப்பார்.
ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் பொறுப்பில் ஆம்லா செயலாற்றுவார். ஒருநாள் அணியில் ஜாக் காலிஸ் இடம்பெற்றுள்ளார். அவர் 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிற்கு வந்துள்ள ஹஷிம் ஆம்லா கூறியதாவது:
கேப்டன் என்றால் தலைவர் அல்ல சேவகன் என்ற பொருளிலேயே பார்க்கிறேன், எனது மிகப்பெரிய பொறுப்பாக இதனைப் பார்க்கிறேன், கேப்டன்சி எனது பேட்டிங்கை பாதிக்காது என்று நம்புகிறேன், மேலும் ரன்களையே குவிப்பேன் என்று நம்புகிறேன்.
எந்த ஒரு அணியும் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் இருக்கவே விரும்பும், நாங்களும் இருந்தோம், ஆனால் சமீபத்தில் அந்த முதலிடத்தை இழந்தோம், ஆகவே தென் ஆப்பிரிக்க அணியை மீண்டும் டெஸ்ட் முதலிடத்திற்கு அழைத்துச் செல்ல பாடுபடுவேன்.
கடந்த ஓராண்டாக நாங்கள் எங்கள் திறமைக்கேற்ப விளையாடவில்லை. முதலிடம் பிடிப்பது என்பதே லட்சியம். என் மனதில் அதுதான் இப்போதைக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு கூறினார் ஹஷிம் ஆம்லா.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி:
அல்விரோ பீட்டர்சன், டீன் எல்கர், ஆம்லா (கேப்டன்), ஃபாஃப் டு பிளேசி, டிவிலியர்ஸ், டுமினி, ஸ்டியான் வான் ஜில், வெர்னன் பிலாண்டர், மோர்னி மோர்கெல், டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹிர், கைல் அபாட், குவிண்டன் டி கக், டேன் பியட்.
ஒரு நாள் அணி:
ஆம்லா, குவிண்டன் டி காக், ஜாக் காலிஸ், டிவிலியர்ஸ், டுமினி, டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ரயான் மெக்லாரன், டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், இம்ரான் தாஹிர், பிலாண்டர், டுபிளேசி, ஏரோன் பேங்கிசோ, பியுரன் ஹெண்ட்ரிக்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
28 mins ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago