ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் இன்னும் 71 ரன்கள் மட்டும் சேர்த்தால் டி20 போட்டிகளில் மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரரான முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
ஐபிஎல் டி20 போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கத் தொடங்கியுள்ளது. அபுதாபியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விராட் கோலியின் ஆர்சிபி அணி களமிறங்குகிறது.
இந்தப் போட்டித் தொடரில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி 71 ரன்கள் சேர்த்தால் மகத்தான சாதனை படைப்பார். 71 ரன்களை கோலி எட்டினால், டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் எனும் பெரும் பெயரைப் பெறுவார்.
» ஒவ்வொரு விக்கெட், சிக்ஸர், பவுண்டரிக்கும் நிதியுதவி: புதிய ஜெர்ஸியில் ஆர்சிபியின் மனிதநேயம்
» இன்ப அதிர்ச்சி அளித்த பிசிசிஐ: உள்நாட்டு வீரர்களுக்கு நிதியுதவி, ஊதிய உயர்வு
அதுமட்டுமல்லாமல் உலக அளவில் டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 5-வது பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் கோலி பெறுவார். தற்போது விராட் கோலி, உள்ளூர் டி20 போட்டிகள், இந்திய அணிக்காக ஆடியது, ஐபிஎல் தொடரில் விளையாடியது என 311 போட்டிகளில் 9,929 ரன்கள் சேர்த்துள்ளார்.
இதில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 133.95 ஆக இருக்கிறது. 2007 முதல் 2021-ம் ஆண்டுகளுக்கு இடையே கோலி 5 சதங்கள், 72 அரை சதங்களை அடித்துள்ளார்.
டி20 போட்டிகளில் யுனிவெர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெயில் 446 போட்டிகளில் 14,261 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் 22 சதங்கள், 87 அரை சதங்கள் அடங்கும்.
2-வது இடத்தில் மே.இ.தீவுகள் வீரர் கெய்ரன் பொலார்ட் 561 போட்டிகளில் 11,159 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம் 56 அரை சதங்கள் அடங்கும்.
பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் 436 போட்டிகளில் 66 அரை சதங்கள் உள்ளிட்ட 10,080 ரன்கள் குவித்து 3-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 304 போட்டிகளில் 10 ஆயிரத்து 17 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். இதில் 8 சதங்கள், 82 அரை சதங்கள் அடங்கும்.
ஐபிஎல் தொடரில் அதிகமான ரன் குவித்த வீரர்கள் அடிப்படையில் கோலி 199 போட்டிகளில் 6,076 ரன்களுடன் முதலிடத்திலும், ஷிகர் தவண் 5 சதங்கள், 40 அரை சதங்களுடன் 5,577 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago