கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மலிங்கா

By செய்திப்பிரிவு

20 - 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியைச் சேர்ந்த மலிங்கா இந்த ஆண்டு தொடகத்தில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது 20 -20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை மலிங்கா தனது யூ டியூப் சேனலில் அதிகாரபூர்வாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ இன்று நான் 20 -20 போட்டிகளுக்கு நிரந்தரமாக ஓய்வை அளிக்க முடிவு செய்திருக்கிறேன். 20- 20 கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அணிக்கும் (இலங்கை அணி, மும்பை இந்தியன்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ்) , அணியில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்”

மலிங்கா சர்வதேச அளவில் 20 -20 போட்டிகளில் 107 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் மலிங்கா விடைபெற்று இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்