ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான கிறிஸ் வோக்ஸ் விலகியதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி ஐபிஎல் டி20 தொடரின் 2-வது சுற்று நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் இருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க வரும் ஒவ்வொரு வீரரும் கட்டாயமாக 6 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ திடீரென கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, இங்கிலாந்து வீரர்கள் பேர்ஸ்டோ(சன்ரைசர்ஸ்) டேவிட் மலான்(ராஜஸ்தான்), கிறிஸ்வோக்ஸ்(டெல்லி) ஆகியோர் தொடரிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தனர்.
இதில் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் டேவிட் மலானுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம், கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த பாட் கம்மின்ஸுக்குப்ப திலாக நியூஸிலாந்து வீரர் டிம் சவுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பென் வார்ஷுயிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் பதிவிட்ட அறிவிப்பில் “ டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டர் கிறிஸ்வோக்ஸ் தனிப்பட்ட பணி காரணமாக 2021, ஐபிஎல்டி2-வது சீசனில் விளையாட முடியவில்லை. அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பென் வார்ஷூயிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
27வயதான பென் வார்ஷுயிஸ் 82 டி20 போட்டிகளி்ல் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிக் பாஷ் லீக் தொடரி்ல் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் பென் விளையாடி வருகிறார். இதுவரை சிட்னி சிக்ஸரில் 69 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை பென் வீழ்த்தியுள்ளார். பிக்பாஷ் லீக் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய 6-வது வேகப்பந்துவீச்சாளர் பென் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இங்கிலாந்திலிருந்து திரும்பிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், அஸ்வின், பிரித்வி ஷா, ரஹானே, அக்ஸர் படேல், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு கரோனா நெகட்டிவ் வந்தபோதிலும், துபாயில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது ஐபிஎல் புள்ளிப்பட்டியலி்ல் 8 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி இருக்கிறது. வரும் 22ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago