ஐபிஎல்2021: சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோவுக்கு மாற்றாக மே.இ.தீவுகள் வீரர் சேர்ப்பு

By ஏஎன்ஐ


ஐபிஎல் டி20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீர்ர ஜானி பேர்ஸ்டோ திடீரென விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஷெர்பானே ரூதர்போர்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி ஐபிஎல் டி20 தொடரின் 2-வது சுற்று நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் இருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க வரும் ஒவ்வொரு வீரரும் கட்டாயமாக 6 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ திடீரென கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, இங்கிலாந்து வீரர்கள் பேர்ஸ்டோ(சன்ரைசர்ஸ்) டேவிட் மலான்(ராஜஸ்தான்), கிறிஸ்வோக்ஸ்(டெல்லி) ஆகியோர் தொடரிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தனர்.

இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் பேர்ஸ்டோவுக்கு மாற்றாக, மே.இ.தீவுகள் வீரர் ஷெர்பானே ரூதர்போர்டை ஒப்பந்தம் செய்துள்ளது. சன்ரைசர்ஸ் நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 2-வதுகட்ட ஐபிஎல் டி20 தொடரில் அதிரடி கரிபீயன் பேட்ஸ்மேன் ஷெர்பானே ரூதர்போர்ட், பேர்ஸ்டோவுக்குப் பதிலாக எங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

23 வயதாகும் இடதுகை பேட்ஸ்மேனான ரூதர்போர்ட் கடந்த 2020ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ரூதர்போர்ட் விளையாடியுள்ளார்

கரீபியன் டி20 தொடரில் செயின்ட்கிட்ஸ் நெவி பேட்ரியாட்ஸ் அணியில் ஆடி வரும் ரூதர்போர்ட் 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்ளிட்ட 201 ரன்கள் குவித்துள்ளார். ரூதர்போர்ட் ஸ்ட்ரைக் ரேட் 136 ஆக உள்ளது.

ஏற்கெனவே பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் டேவிட் மலானுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் ரிலே மெரிடித்துக்குப் பதிலாக பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸை பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்தது.

கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த பாட் கம்மின்ஸ், 2-வது கட்ட ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அவருக்குப்பதிலாகநியூஸிலாந்து வீரர் டிம் சவுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியில் ஆடம் ஸம்பாவுக்குப் பதிலாக இலங்கை வீரர் ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்