பேட்டிங்கில் ரோஹித், ஹர்திக் பாண்டியா, பவுலிங்கில் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரது பங்களிப்பை கேப்டன் தோனி விதந்தோதியுள்ளார்.
நேற்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 45 ரன்களில் வீழ்த்தி 2 புள்ளிகளைப் பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 10 ஓவர்களில் 52/3 என்ற நிலையிலிருந்து ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி பார்ட்னர்ஷிப் மூலம் 166 ரன்களை எட்டியது.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் இந்திய பந்து வீச்சாளர்களின் அபாரமான நேர்த்திக்கு 121 ரன்களில் சரணடைந்தனர். நெஹ்ரா 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். பாண்டியா பந்து வீச்சிலும் 23 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றி குறித்து தோனி பேசியதாவது:
ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர் ஹர்திக் பாண்டியா என்பதை அவர் நமக்கு நிரூபித்துள்ளார். அவர் 4 ஓவர்களை வீசியதைப் பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நமக்கு வலுவூட்டுகிறது. 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள், இவ்வாறு அணியின் அனைத்து அடிப்படைகளும் நிறைவேற்றப்படுமானால் அணியில் மாற்றம் தேவையில்லை.
ஹர்திக்கிற்கு ஆட்டம் கைகொண்டால் 15 ரன்கள் நமக்கு கூடுதலாகக் கிடைக்கும். 160 என்பது வெற்றிபெறுவதற்கான ஸ்கோர் என்றால் ஹர்திக் அதனை 165-175 என்று மாற்றுகிறார். இது பவுலர்களூக்கு நல்லது, அவரைப்போன்ற ஒருவர் அணிக்கு அவசியம், அவர் ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடியவர் (கேம்-சேஞ்சர்).
நாம் ஹர்திக்கிடம் எந்த வித அறிவுரையும் வழங்க வேண்டியதில்லை. அவருக்கு ஒன்றுமட்டுமே தெரியும், அது பந்தை அடித்து விரட்டுவது. பவுண்டரிக்கு வெளியே தூக்கி அடிப்பதில் பெரிய நாட்டமுடையவர். அதிக போட்டிகளை ஆடுவதன் மூலம் அவர் மேலும் வளர்ச்சியுறுவார், வலுவடைவார். முதல் பந்திலிருந்தே அடிக்கும் அரிய திறமை உடையவர் ஹர்திக் பாண்டியா.
ஆனாலும் டி20 வேறு, 50 ஓவர்கள் கிரிக்கெட் வேறு, இருப்பினும் ஹர்திக் பாண்டியாவிடம் 50 ஓவர்கள் போட்டிகளுக்கான திறமையும் வளரும் என்று நான் நம்புகிறேன்.
ஆஷிஷ் நெஹ்ரா பற்றி...
ஆஷிஷ் நெஹ்ராவிடம் பிடித்தது என்னவெனில் களத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை 100% அறிந்திருப்பவர். அவரைப்பொறுத்தவரை கவலை தரும் அம்சம் அவரது உடல் தகுதி மட்டுமே. அவர் விரைவில் உடல்தகுதியை இழந்து விடுகிறார். ஆனால் அவர் மிகவும் கட்டுக்கோப்பானவர் அதனால்தான் இன்னமும் ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் 50 ஓவர்கள் கிரிக்கெட்டில் இனி ஆடுவது சிரமமே. திடீரென 3, மூன்றரை மணி நேரம் களத்தில் இருக்க வேண்டும்.
ஆனால் இந்த வடிவம் அவருக்கு பொருத்தமாக உள்ளது, ஒரு குறிப்பிடத்தகுந்த வேகத்தில் அவரால் ஸ்விங் செய்ய முடிகிறது. அவர் டி20 உலகக்கோப்பை முழுதும் உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ரோஹித் சர்மா பற்றி...
மொத்தமாக பார்த்தால் அவர் பவுலர்களின் வேகத்தை பயன்படுத்திக் கொள்கிறார். பேக் ஆஃப் லெந்த் பந்துகளுக்கு கட் ஷாட்கள் ஆடுகிறார். மேலும், இறுதி வரை தான் நிற்பதையும் ஹர்திக்குக்கு நிறைய பேட்டிங் வாய்ப்பு கொடுப்பதையும் ரோஹித் உறுதி செய்தார். இதனால்தான் ஸ்கோர் 166 ஆனது, இல்லையெனில் 140-145 என்றே இருந்திருக்கும்.
யுவராஜ் சிங்கைப் பொறுத்தவரை 15 ரன்னாக இருந்தாலும் 20 ரன்னாக இருந்தாலும் அவருக்கு அது தன்னம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது. மிட் ஆஃபில் அவர் அடித்த பவுண்டரி அற்புதமானது, அவரிடமிருந்து இப்படிப்பட்ட ஆட்டத்தைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். 15, 20 என்று அவர் தன்னம்பிக்கை பெற்றுவிட்டால் அவர் ஒட்டுமொத்தமாக வேறு வகையான வீரராக திகழ்வார். பெரிய ஸ்கோர் ஒன்றை அவரிடமிருந்து நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் அவரது அணுகுமுறை எனக்குப் பிடித்துள்ளது.
இவ்வாறு கூறினார் தோனி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago