‘‘இந்தியா போட்டியை இழந்தது’’ – அறிக்கையை மாற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

By செய்திப்பிரிவு

இந்தியா தங்கள் கிரிக்கெட் அணியை களமிறக்க முடியாமல் போனதால் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியை இழந்தது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முதலில் தெரிவித்து இருந்தது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் என அடுத்தடுத்து கரோனா பரவல் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

மான்செஸ்டரில் இன்று தொடங்கவிருந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. முதலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் "பயிற்சி முகாமிற்குள் கரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருந்தத்தக்க வகையில் இந்தியா அணியை களமிறக்க முடியவில்லை. இதனால் இந்தியா போட்டியை இழந்தது’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பின்னர் உடனடியாக இங்கிலாந்து வாரியம் புதிய அறிக்கையை வெளியிட்டது, அதில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டை இந்தியா இழந்தது என்ற குறிப்பு மாற்றப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்