மான்செஸ்டரில் நாளை தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த ஓவல் டெஸ்டில் இங்கிலாந்துஅணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியபின் பெருத்த நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கும்.
கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு திராவி்ட் கேப்டன்ஷி்ப்பில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி 14 ஆண்டுகளுக்குப்பின் வென்று சாதனை படைக்கும்.
இந்திய அணியில் பேட்டிங் தொடக்கத்தில் கவலைத் தரக்கூடியதாக இருந்தாலும் அடுத்தடுத்த டெஸ்ட்களில் ஆறுதல் கிடைத்து வருகிறது. புஜாரா ஃபார்முக்கு திரும்பியுள்ளார், ரோஹித், ராகுல் சதம்அடித்து ஃபார்மில் உள்ளனர். கேப்டன் கோலி இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. துணைக் கேப்டன் ரஹானேயின் பேட்டிங் ஃாபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது.
» டி20 உலகக் கோப்பை: 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு
» ஆப்கனில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கக் கூடாது: தடை விதித்த தலிபான்கள்
ரஹானே கடந்த 4 போட்டிகளிலும் ஒழுங்காக விளையாடவில்லை, ஒருவேளை ரஹானேவுக்கு நாளை ஓய்வு அளிக்கப்பட்டால், விஹாரி, சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கும். கடந்த 2018ம்ஆண்டு தென் ஆப்பிரக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட்களில் ரஹானே அமரவைக்கப்பட்டால், ஒருவேளை நாளை அமரவைக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அமரவைக்கப்படுவார்.
ரிஷப் பந்த் கடந்த 4 டெஸ்ட்களிலும் விளையாடி வருகிறார், விருதிமான் சாஹா அழைத்துச் செல்லப்பட்டும் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. நாளை விக்கெட் கீப்பர் தேர்வில் மாற்றம் இருக்குமா என்பது கடைசிநேரத்தில்தான் தெரியும்.
பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓவர்லோடு வழங்கப்படுவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷமி அழைக்கப்படலாம். அடுத்து ஐபிஎல் தொடர், உலகக் கோப்பை வருவதால், அதைக் கருதி பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும்.
ஜடேஜா தனக்குரிய பணியைச் செய்து தனது தேர்வை கடந்த போட்டியில் நியாயப்படுத்தியுள்ளார். ஆதலால், அஸ்வினுக்கு கடைசி டெஸ்டிலும் களமிறங்க வாய்ப்புக் கிடைக்காது என்றே தெரிகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளாக அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவகையில் ரஹானே, பும்ரா இருவர் மட்டுமே மாற்றப்பட வாய்ப்புள்ளது மற்றவகையில் வெற்றிக்கூட்டணியை கோலி மாற்ற விரும்பமாட்டார்.
ஆனால், மான்செஸ்டர் மைதானத்தில இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. அதிலும் கடந்த 2018ம் ஆண்டு நடந்த போட்டியில் மொயின் அலியிடம் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோற்றது. ஆனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களிடம் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடந்தபோது காலநிலை குளிர்ச்சியாக இருந்ததால், வேகப்பந்துவீச்சுக்குஏதுவாக இருந்தது. ஆனால், தற்போது மான்செஸ்டரில் கோடைகாலமாக இருப்பதால், ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக மாறக்கூடும்.
இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லர், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் அழைக்கப்பட்டுள்ளனர். ஆன்டர்ஸன், ராபின்ஸன் இருவரில் ஒருவருக்கு நாளை ஓய்வு அளிக்கப்படலாம். அதற்கு பதிலாக ஜேக் லீச் சேர்க்கப்படலாம்.
இந்தத் தொடரை வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி தீவிரமாக முயற்சிக்கும். ஒருவேளை இந்தத் தொடரை இங்கிலாந்து அணி இழந்துவிட்டால், அடுத்துவரக் கூடிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் அந்த அணிக்கு மனரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆதலால் முடிந்தவரை இந்த டெஸ்ட் போட்டியை வெல்வதற்குதான் இங்கிலாந்து அணி கடுமையாக முயற்சிக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago