டி20 உலகக் கோப்பை: 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு

By ஏஎன்ஐ

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தத் தொடருக்கான அணிகளை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

வங்கதேச அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் அடிப்படையில் 15 வீரர்களைக் கொண்ட அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கதேச அணியில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ரூபல் ஹுசைன் இடம் பெறவில்லை. அமினுல் இஸ்லாம் காத்திருப்பு வீரராக வைக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரூபல் ஹுசைன் இடம் பெற்ற நிலையிலும் டி20 தொடருக்கு அவரைத் தேர்வு செய்யவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சவுமியா சர்க்கார் மோசமான ஃபார்மில் இருந்து விளையாடினார். இருப்பினும் அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ரூபல், மொசாடக் ஹுசேன், தஜுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. ரூபலுடன் சேர்ந்து லெக் ஸ்பின்னர் அமினுலும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத முகமது மிதும் சேர்க்கப்படவில்லை.

வங்கதேச அணி விவரம்:

மெஹ்மத்துல்லா (கேப்டன்), சஹிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான், சவுமியா சர்க்கார், லிட்டர் குமார் தாஸ், ஆபிப் ஹுசேன், முகமது நமிம், நுருல் ஹசன் சோஹன், சமிம் ஹுசேன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, முகமது சயிப்புதீன், சோரிபுல் இஸ்லாம், மெஹதி ஹசன், நசும் அகமது.

காத்திருப்பு வீரர்கள்: ரூபல் ஹுசைன், அமினுல் இஸ்லாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்