ஆசிய அணிகளின் கேப்டன்களில் சாதனை: விராட் கோலி புதிய மைல்கல்; பும்ராவின் புதிய ரெக்கார்ட்

By ஏஎன்ஐ

ஆசிய அணிகளின் கேப்டன்களில் சேனா (SENA) நாடுகள் எனச் சொல்லப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

ஓவலில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின் மகத்தான வெற்றியை கோலிப் படை பதிவு செய்தது. அதுமட்டுல்லாமல் இங்கிலாந்து தொடரில் 2 வெற்றிகளை கடந்த 35 ஆண்டுகளுக்குப் பின் கோலிப் படை பதிவு செய்துள்ளது.

இந்திய அணிக்கு விராட் கோலி இதுவரை 65 போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். அதில் 38 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் கோலி தலைமையில் இந்திய அணி சந்தித்துள்ளது. 11 போட்டிகளை டிரா செய்துள்ளது இந்திய அணி.

விராட் கோலியின் வெற்றி சதவீதம் 58.46 ஆக இருக்கிறது. இந்திய கேப்டன்களிலும் அதிகமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர் என்ற பெருமை விராட் கோலியையே சாரும். 2019-ம் ஆண்டு தோனிக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக கோலி வலம் வருகிறார்.

இதில் இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணிக்கு எதிராக கோலி இதுவரை 3 வெற்றிகளையும், ஆஸ்திரேலிய மண்ணில் 2 வெற்றிகளையும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த மண்ணில் ஒரு வெற்றியையும் கோலி தலைமையில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற ஆசிய அணிகளின் கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் இதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி 22 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 13 தோல்விகள், 3 போட்டிகள் டிரா, 6 ஆட்டங்களில் வென்றுள்ளது.

ஆனால், ஆசிய அணிகளில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்கள் மியான்தத், வாசிம் அக்ரம் ஆகியோர் தலைமையில் அந்நாட்டு அணி சேனா நாடுகளுக்கு எதிராக 4 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், கோலி தலைமையில் இந்திய அணி 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

1986-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய அணி வந்திருந்த இங்கிலாந்து மண்ணில் 2 வெற்றிகளைப் பெற்றதே அதிகபட்ச வெற்றியாகும். ஆனால், கோலி தலைமையில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி 3 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுள்ளது.

பும்ராவின் புதிய சாதனை

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஓவல் டெஸ்ட்டில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து வீரர் ஒலே போப் விக்கெட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் அரங்கில் 100-வது விக்கெட்டை பும்ரா சாய்த்தார். மிகக் குறைவான போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையை பும்ரா பெற்றார்.

இதற்கு முன் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 25 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவரின் சாதனையை முறியடித்த பும்ரா 24 போட்டிகளில் 100-வது விக்கெட்டுகளை எட்டிவிட்டார். கபில் தேவுக்கு அடுத்த இடத்தில் இர்பான் பதான் 28 போட்டிகளில் 100-வது விக்கெட்டையும், ஷமி 4-வது இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்