தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஸ்டெயின், இன்று அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2004-ம் ஆண்டு ஏபி டிவில்லியர்ஸுடன் சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டேல் ஸ்டெயின் அறிமுகமானார். கடைசியாக 2019-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போர்ட் எலிசபெத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்டெயின் விளையாடினார்.
2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை தனது வேகப்பந்துவீச்சில் உலக அணிகளை மிரட்டிய ஸ்டெயின், ஐசிசி தரவரிசையில் 263 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.
» இந்திய வட்டு எறிதல் வீரர் வினோத் குமாரிடமிருந்து வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது ஏன்?
» டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2-வது தங்கம்: ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் உலக சாதனை
ஆலன் டொனால்ட், ஷான் போலக், பிலான்டர், மோர்ன் மோர்கல் ஆகியோர் வரிசையில் ஸ்டெயின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்தார். இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெயின் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 125 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும் 47 டி20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
2010-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் போன்று ரிவர்ஸ் ஸ்விங்கில் மிரட்டிய ஸ்டெயின் 51 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதை மறக்க முடியாது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் 300 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஸ்டெயின் பெற்றார்.
30 வயதை ஸ்டெயின் கடந்தபோது அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டார். 2013, 2014-ம் ஆண்டுகளில் காயத்தால் அவதிப்பட்டு முக்கிய டெஸ்ட் தொடர்களை ஸ்டெயின் தவறவிட்டார்.
2015-ம் ஆண்டு இந்தியப் பயணத்தில் மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் தசைப் பிடிப்பால் பாதியிலேயே வெளியேறிய ஸ்டெயின் அந்தத் தொடர் முழுவதும் விளையாடவில்லை. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஸ்டெயின் வீசிய கடைசி ஓவரில் நியூஸிலாந்து வீரர் எலியாட் அடித்த சிக்ஸர், ஆட்டத்தைத் திருப்பிப் போட்டது. அதோடு ஸ்டெயின் மீதிருந்த வேகப்பந்துவீச்சாளர் என்ற அச்சமும் துடைக்கப்பட்டது.
ஐபிஎல் டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகளுக்காக ஸ்டெயின் விளையாடியுள்ளார். இது தவிர கரீபியன் லீக், பாகிஸ்தான் லீக், தென் ஆப்பிரிக்க லீக், கவுண்டி அணிகளிலும் ஸ்டெயின் பங்கேற்றுள்ளார்.
டேல் ஸ்டெயின் தனது ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது என்று நம்பலாம். கடந்த 20 ஆண்டுகளாகப் பயிற்சி, போட்டி, பயணம், வெற்றி, தோல்வி, காயங்கள், மகிழ்ச்சி, சகோதரத்துவம், நட்பு என ஏராளமான நினைவலைகள் சொல்வதற்கு உள்ளன. நன்றி கூற அதிகமானோர் உள்ளனர்.
இதை ஒன்றுசேர்க்க வல்லுநர்களிடம் விட்டுவிடுகிறேன். நான் மிக அதிகமாக விரும்பிய கிரிக்கெட்டிலிருந்து இன்று அதிகாரபூர்வமாக ஓய்வு பெறுகிறேன். கசப்பான இனிப்பாக இருந்தாலும், நன்றி கூறுகிறேன். ஒவ்வொருவருக்கும் நன்றி. அணி வீரர்கள், நண்பர்கள், குடும்பத்தார், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுடன் ஒன்றாகச் சேர்ந்து பயணித்தது மதிப்புமிக்கது''.
இவ்வாறு ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago