டோக்கியோவில் நடைபெற்றும் வரும் பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார். பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கதுனியா.
» நாடு முழுவதும் ஒரே நாளில் 42,909 பேருக்கு கரோனா பாதிப்பு; 380 பேர் உயிரிழப்பு
» ராமர் இல்லாமல் அயோத்யாவுக்கு பெருமை ஒன்றுமில்லை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
“யோகேஷ் கதுனியா சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் வெள்ளிப்பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. அவரது இந்த சிறப்பான வெற்றி வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். #Paralympics", என்று பிரதமர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago