டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
T46/47 பிரிவில் அவர் 2.06 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் அமெரிக்க வீரர் ரோட்ரிக் டவுன்சீட் 2.15 மீட்டர் தாண்டி தங்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இன்னொரு இந்திய வீரர் ராம்பால் சஹார், 1.94 மீட்டர் உயரம் தாண்டி 5வது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக இன்று காலை இந்திய வீராங்கனை பவினாபென் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது நிஷாத் குமார் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 2-வது வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
பிரதமர் வாழ்த்து:
வீரர் நிஷாத் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திறமையான விளையாட்டு வீரர் நிஷாத்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றதில் மகிழ்சி அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago