ஆன்டர்ஸன் பந்துவீச்சில் ஒருமுறை, இருமுறை அல்ல 7 முறை கோலி ஆட்டமிழந்துள்ளதால் என்ன தவறு என்பதை அறிய சச்சின் டெண்டுல்கரிடம் கோலி ஆலோசனை பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7 ரன்னில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஆட முயற்சித்து ஆட்டமிழந்தார்.
ஆன்டர்ஸன் பந்துவீச்சில் கோலி விக்கெட்டை இழப்பது இது 7-வது முறையும். இந்த 7 முறையும் ஆப்ஃசைடில் பந்து விலகிச் செல்லும் போதும், அவுட் ஸ்விங்கிலும் கோலி தேவையில்லாமல் பந்தைத் தொட்டு ஆட்டமிழந்தார். நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல்பந்திலயே விக்கெட்டை இழந்து கோலி வெளியேறினார்.
» 'ரிப்பேரான ரன் மெஷின்' ? சர்வதேச அரங்கில் 50 இன்னிங்ஸ்களாக சதமடிக்காத கோலி
» ஆஸி.யில் இனவெறி; இங்கிலாந்தில் பந்தெறி தாக்கு: தொடர்ந்து குறிவைக்கப்படும் முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயன் பந்துவீச்சிலும் இதேபோன்று கோலி 7 முறை ஆட்டமிழந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் போன்று சோகமான பயணமாக கோலிக்கு அமைந்துவிடும்போல் தெரிகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கோலியின் பேட்டிங் மிகவும் பலவீனமாகி, ஃபார்ம் இல்லாமல் இருப்பது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்து அறிவுரை வழங்கியுள்ளார்.
போட்டியின் வர்ணனையின்போது சுனில் கவாஸ்கர் கூறுகையில், “ ஒருமுறை, இருமுறை அல்ல 7 முறை ஆன்டர்ஸன் பந்துவீ்ச்சில்தான் விராட் கோலி ஆட்டமிழந்துள்ளார். உடனடியாக என்ன செய்யலாம், எவ்வாறு தவறுகளைத் திருத்தலாம் என்பது குறித்து விராட் கோலி, சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்(எஸ்ஆர்டி) அணுகி ஆலோனை பெற வேண்டும்.
விராட் கோலி பேட் செய்வதைப் பார்க்கும்போது,கடந்த 2014ம் ஆண்டு இந்தியப் பயணம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்தத் தொடரில் கோலி ,ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஆன்டர்ஸன் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். அப்போது ஆஃப் ஸ்டெம்பிற்கு நெருக்கமாக வந்த பந்தில்தான் ஆட்டமிழந்திருநதார்.
கோலியின் நிலை எனக்கு இப்போது பார்த்தால் சிறிது வேதனையாக இருக்கிறது. இப்போது என்னவென்றால், , ஆன்டர்ஸன் பந்துவீச்சில் 5-வது 6-வது 7-வது ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்தைக்கூட விளையாட முடியாமல் கோலி ஆட்டமிழக்கிறார்.
கோலி தனது பேட்டிங்கில் இருக்கும் தவறுகளைத் திருத்திக் கொள்ள உடனடியாக சச்சின் டெண்டுல்கரை அணுகி ஆலோசனை பெற வேண்டும், அவர் கடைபிடித்த வழிகளை பின்பற்ற வேண்டும்.
கடந்த 2003-04ம் ஆண்டு சிட்னி டெஸ்டில் சச்சின் என்னமாதிரியான உத்திகளைக் கையாண்டாரோ அதேபோன்ற உத்திகளை கோலி கையாள வேண்டும். நான் இனிமேல் கவர்-டிரைவ் ஷாட் விளையாடமாட்டேன் என்று கூறி கட்டுக்கோப்புடன் கோலி விளையாட வேண்டும்.
ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்தை அடிக்க முற்பட்டு சச்சின் தொடர்ந்து ஆட்டமிழந்துவந்தார். ஆனால் சி்ட்னி டெஸ்டில் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற எந்த பந்தையும் சச்சின் அடிக்கவில்லை, அதனால் சிட்னி டெஸ்டில் இரட்டை சதத்தை சச்சின் அடித்து இழந்த தனது ஃபார்மை மீட்டார்
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago