உலகக் கோப்பைக்கான இந்திய அணி நன்றாக அமைந்துள்ளது: சுரேஷ் ரெய்னா

By பிடிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியதையடுத்து உலகக்கோப்பைக்கான இந்திய அணி நன்றாக அமைந்துவிட்டது என்கிறார் சுரேஷ் ரெய்னா.

ஆஸ்திரேலியா தனது முழு பலத்துடன் ஆடவில்லையே என்ற கேள்வியை அவரிடத்தில் முன்வைத்த போது ரெய்னா கூறியதாவது:

எதிரணி எந்த அணியாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்துவதே எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வெற்றி எங்கள் தயாரிப்பின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது.

கேப்டனுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இதற்கான உரிய அங்கீகாரத்தை நாம் வழங்க வேண்டும்.

டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்குவது அவசியம், ஏனெனில் அப்போது திட்டமிடுதலை நன்றாகச் செய்ய முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான் 3-ம் நிலையில் இறங்கினேன். ஆனால் தற்போது இந்திய அணி உலகக்கோப்பைக்கு நன்றாக அமைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.

5,6,7-ம் நிலைகளில் நான், யுவராஜ், தோனி இருப்பதால் அச்சமற்ற கிரிக்கெட்டை ஆட முடிகிறது.

கடைசி போட்டியின் போது கடைசி ஓவர் 3-வது பந்தில் எப்படியாவது சிங்கிள் எடுத்தேயாக வேண்டும் என்று யுவராஜ் என்னிடம் கூறினார். ஆனால் அதற்கு முன்னரே பவுண்டரி மற்றும் சிக்ஸ் மூலம் யுவராஜ் நெருக்கடியிலிருந்து மீட்டுவிட்டார். அதன் பிறகு நான் 2 ரன்கள் எடுத்தேன், உடனே யுவராஜ் நான் ஆட்டத்தை வெற்றியாக முடிக்க முடியும் என்றார். எனவே நான், யுவராஜ், தோனி ஆகியோர் மூலம் தேவைப்படும் அனுபவம் உள்ளது” என்று கூறிய ரெய்னா, அறிமுக வீரர்களான ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோரது பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்