வெலிங்டனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலியா ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.
ஆடம் வோஜஸ் 7 ரன்களில் களத்தில் இருக்கிறார், இவர் களத்தில் இருப்பதற்குக் காரணம் நடுவர் இல்லிங்வொர்த் செய்த மிகப்பெரிய தவறே. இவருடன் உஸ்மான் கவாஜா 57 ரன்களுடன் இருக்கிறார்.
சர்ச்சை என்ன?
முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை டக்கி பிரேஸ்வெல் வீச வந்தார். 4வது பந்து இன்ஸ்விங்கர் ஆக அவர் ஆடாமல் விட்டார் பந்து ஸ்டம்பைத் தாக்கியது வோஜஸ் பவுல்டு ஆனார். ஆனால் நடுவர் இலிங்வொர்த் நோ-பால் என்று அறிவித்தார். ஆனால் ரிப்ளேயில் பிரேஸ்வெல்லின் பின்னங்காலின் கணிசமான பகுதி கிரீசிற்குள் இருந்தது தெரியவந்தது.
இதில் சிக்கல் என்னவெனில் சந்தேகம் இருந்தால் நோ-பாலா என்று முதலிலேயே களநடுவர் இலிங்வொர்த் சரிபார்த்திருக்கலாம் ஆனால் நேரடியாக தவறாக நோ-பால் என்றார். இதனை நியூஸிலாந்து ஏற்றுக் கொண்டாலும் 147/3 என்பது வேறு 147/4 என்பது வேறு, இது டெஸ்ட் போட்டியின் போக்கை மாற்றலாம்.
கடந்த ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் 3 ஓவர்களில் வீசிய 8 நோ-பால்களை நடுவர் கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் நடுவர் அரிய வேளைகளில் தாங்கள் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு பந்து வீசும் போது பவுலர்களின் முன்னங்காலை மட்டும் வைத்து நோ-பால் தீர்ப்பளிக்கின்றனர். எது எப்படியோ ஆடம் வோஜஸ் பிழைத்தார், மேலும் ஒரு தீர்ப்பு ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமானது.
ஆஸி. பவுலிங் அபாரம்: நியூஸிலாந்து சரிவு:
டாஸ் வென்ற ஸ்மித் பவுலிங்குக்கு சாதகமான ஆட்டக்களத்தில் முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தனர். மெக்கல்லமின் தொடர்ச்சியான 100-வது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியில் பேர்ட், சிடில் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டதும் பிட்சின் தன்மையை வலியுறுத்தியது. 2.2 ஓவர்களில் 17 ரன்கள் என்று பாசிடிவ்வாக தொடங்கினர் கப்தில், லேதம் ஜோடி, ஆனால் ஹேசில்வுட் பந்துகள் சரியான அளவில் பிட்ச் ஆகி உள்ளேயும் வெளியேயும் அழகாக ஸ்விங் ஆனது.
இதில் லாதம் (6), கப்தில் (18) ஆகியோரை ஹேசில்வுட் வீழ்த்தினார். கப்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்தார். லாதம் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். வில்லியம்சன் 16 ரன்களில் சிடில் பந்தில் விக்கெட் கீப்பர் நெவிலிடம் கேட்ச் ஆனார். மெக்கல்லம் 7 பந்துகளே நீடித்தார் ரன் இல்லை ஹேசில்வுட் பந்து ஒன்று உள்ளே வர கால்காப்பு-பேட் உடன்பாட்டில் வார்னரிடம் கேட்ச் ஆனது. நிகோல்ஸை சிடில் வீழ்த்த நியூஸிலாந்து 51/5 என்று ஆனது.
பிறகு கோரி ஆண்டர்சன் (38), மார்க் கிரெய்க் (41), கடைசியில் டிரெண்ட் போல்ட் 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து 48 ஓவர்களில் 183 ரன்களுக்குச் சுருண்டது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சிடில், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா களமிறங்கிய போது டிம் சவுத்தி, தொடக்க வீரர்கள் ஜோ பர்ன்ஸ் (0), வார்னர் (5) ஆகியோரை வீழ்த்தினார், இருவருமே விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய போது ஆஸ்திரேலியா 5/2 என்று ஆனது.
ஆனால் அதன் பிறகு பிட்ச் கொஞ்சம் சுலபமானது, கவாஜா, ஸ்மித் ஜோடியும் இன்னிங்ஸை நிதானப்படுத்தினர். இருவரும் இணைந்து 32 ஓவர்களில் 126 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
முதலில் கொஞ்சம் திணறினாலும் ஸ்மித் பிறகு சீராக பவுண்டரிகளை அடித்தார், அவருக்கு மார்க் கிரெய்க் ஸ்லிப்பில் ஒரு கேட்சையும் கோட்டை விட்டார். அவர் 112 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து கிரெய்க் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகுதான் ஆடம் வோஜஸ் நோ-பால் சர்ச்சை எழுந்தது. ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago