வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 4-ம் நாளான இன்று நியூஸிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் ஸ்மித் சரியாக பிட்சைக் கணித்து நியூஸிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்து 183 ரன்களுக்கு சுருளச் செய்தார். பிறகு பேட்டிங் சற்றே எளிதாக கவாஜா (140 ரன்கள், 25 பவுண்டரி), ஆடம் வோஜஸ் (239 ரன்கள், 30 பவுண்டரி 3 சிக்சர்கள்) ஆகியோர் வெளுத்துக்கட்ட ஆஸ்திரேலியா 562 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூஸிலாந்து 4-ம் நாளான இன்று 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியா ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அணி என்பதை நிரூபித்தது. ஆனாலும் நடுவரின் உதவி இல்லாமலில்லை.
ஆடம் வோஜஸ் முதல் நாள் ஆட்டத்தில் டக் பிரேஸ்வெல் பந்தை ஆடாமல் விட்டு 7 ரன்களில் பவுல்டு ஆன போது நடுவர் தவறாக நோ-பால் கொடுத்ததே நியூசிலாந்தின் பின்னடைவுக்கு காரணமானது என்றால் மிகையாகாது. ஆஸ்திரேலியா தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நேதன் லயன் 4 விக்கெட்டுகளில் லேதம் (63), மார்டின் கப்தில் (45), வாட்லிங், மற்றும் டிம் சவுத்தி ஆகிய முக்கிய விக்கெட்டுகள் அடங்கும். மிட்செல் மார்ஷ் மெக்கல்லம், மற்றும் கோரி ஆண்டர்சன் ஆகியோரை எல்.பி. முறையில் வீழ்த்தினார்.
மேலும் இன்று ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், ஜேக்சன் பேர்ட் ஆகியோர் நல்ல முறையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய, நேதன் லயன் எதிர்முனை வேகப்பந்து வீச்சாளர்களின் கால் தடயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
3-ம் நாள் ஆட்ட இறுதியில் 10 ரன்களில் மெக்கல்லம் காலியானவுடனேயே நியூஸிலாந்து மீளும் வாய்ப்பு மங்கியது. 173/4 என்று தொடங்கிய நியூஸிலாந்து 327 ரன்களுக்குச் சுருண்டது.
கடைசியில் மார்க் கிரெய்க் (33), டிம் சவுத்தி (48 ரன்கள் 23 பந்துகள் 5 பவுண்டரி 3 சிக்சர்கள்) ரசிகர்களுக்கு அதிரடி மூலம் விருந்து படைத்தனர்.
நடுவரின் தவறால் பிழைத்த ஆடம் வோஜஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டது நியூஸிலாந்து தோல்வியின், ஆஸி.வெற்றியின் மிகச்சிறந்த நகைமுரணானது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago