டி20 உலகக் கோப்பை: முக்கிய வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: புதிய வீரர் சேர்ப்பு

By ஏஎன்ஐ


ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரி்க்கெட் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் 17ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதிவரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்னளன. இதற்கான இறுதி அணிப் பட்டியலை ஒவ்வொரு அணியினரும் அறிவித்து வருகின்றனர். ஏற்கெனவே நியூஸிலாந்து அணி அறிவித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியும் டி20 அணியை இன்று அறிவித்துள்ளது

ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் விக்கெட் கீப்பராக மேற்கு ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஸ் அறிமுக வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 அணிக்கு கேப்டனாக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டுள்ளார். மே.இ.தீவுகள், வங்கதேசத் தொடரில் இடம் பெறாத மேக்ஸ்வெல், ரிச்சார்ட்ஸன், ஸ்டாய்னிஷ், வார்னர், கம்மின்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முழங்கை காயத்திலிருந்து ஸ்மித் மீண்டுவிட்டதால் அவரும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

சுழற்பந்துவீச்சுக்கு 4 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குயின்லாண்ட் வீரர் மிட்ஷெல் ஸ்வீப்ஸன், ஆஸ்டன் அகர், ஆடம் ஸம்ப்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர். மே.இ.தீவுகள், வங்கதேசத்துக்கு எதிராக ஸ்வீப்ஸன் சிறப்பாகப் பந்துவீசயதைத் தொடர்ந்து அவர் அணியில் வாய்ப்புப் பெற்றுள்ளார்.
வேகப்பந்துவீச்சில் ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க், கேனே ரி்ச்சார்ட்ஸன், கம்மின்ஸ், ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஷ் ஆகியோர் உள்ளனர்.

டாஸ்மானிய வீரர் நாதன் எலிஸ்,டேனியல் சாம்ஸ், டேன் கிறிஸ்டியன் ஆகியோர் அணியுடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் காத்திருப்பு வீரர்களாக வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணி செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல்வாரம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவி்த்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் பின்ச்(கேப்டன்), ஆஸ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், ஜோஸ் இங்லிஸ், மிட்ஷெல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சார்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஷ், மிட்ஷெல் ஸ்வீப்ஸன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸம்ப்பா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்