செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியினர் ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் வினய் குமார் விமானத்தில் ஐக்கிய அரபு அமீரம் செல்லும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் ட்வி்ட்டர் தளத்தில்பகிரப்பட்டுள்ளது.
ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன.
இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான போட்டி அட்டவணை மற்றும் தேதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
» 11 ஆண்டுகளுக்குப்பின்: சேவாக், கம்பீர் ஜோடிக்குப்பின் இப்போது ரோஹித்,ராகுல் இணை மைல்கல்
» 'என்னை இந்தியர்கள் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்': சச்சின் குறித்து ஷோயப் அக்தர் ரீவைண்ட்
ஐக்கியஅரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 27 நாட்கள் நடக்கும்போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பார்க்கில் கடந்த 2 வாரங்களாக பயோ-பபுள்சூழலி்ல் பயிற்சியை முடித்துவிட்டு நேற்று ஐக்கியஅரபு அமீரகம் புறப்பட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றபின், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் 2 முறை கோவிட் பரிசோதனை நடத்தப்படும் அதில் நெகட்டிவ் வரும் பட்சத்தில் பயோ-பபுள் சூழலுக்குள் அனுப்பப்படுவார்கள்.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியினரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரும் கடந்த2020ம் ஆண்டு சீசனில் தங்கியிருந்த ஹோட்டலில் மீண்டும் தங்குகின்றனர். மற்ற 6 அணிகளும் புதிதாக ஹோட்டலில் புக் செய்து தங்குகின்றனர்.
பிசிசிஐ பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, சிறிய ஹோட்டலைத் தேர்வு செய்து அந்த ஹோட்டல் முழுவதையும் பயோ-பபுள் சூழலாக்கி, வீரர்களைத் தங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெரிய ஹோட்டலாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட தளம் முழுவதையும் கையகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்வதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் பலர் சென்னைக்கு ஏற்கெனவே வந்துவி்ட்டனர். சிஎஸ்கே அணியினர் அனைவரும் சென்னையில் இருந்தபடி இன்று ஐக்கியஅரபு அமீரகம்புறப்படுவார்கள் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago