ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான 16 வீரர்கள் கொண்ட அணியை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
ஆசியாவில் 4 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா, டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் நியூஸிலாந்து அணி விளையாட உள்ளதால், வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி ஊழியர்கள் ஆகியோரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் தனித்தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கும், பாகிஸ்தானுக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் குழுவும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தனிபயிற்சியாளர்கள் குழுவும், உலகக் கோப்பைக்கு தனிக்குழுவும் செல்கிறது.
» பார்சிலோனா அணியில் தொடர முயன்றேன்; 50% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதித்தேன்: மெஸ்ஸி கண்ணீர்
» முதல் டெஸ்ட் டிரா: மழை விளையாடியதால் கடைசிநாள் ஆட்டம் ரத்து: வெட்கக்கேடு: கோலி ஆதங்கம்
இதில் பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணி விளையாடுகிறது வங்கதேசத்துக்கு சென்று 3 டி20 போட்டிகளில் நியூஸிலாந்து அணி விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கும் தனியாக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார்.
டி20 உலகக் கோப்பைக்கான நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை அனுபவ வீரரும் நடுவரிசையில் வலுவான பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லருக்கு இடம் வழங்கப்படவில்லை. வேகப்பந்துவீச்சாளர் கோலின் டி கிராண்ட்ஹோம், பின் ஆலன் ஆகியோரும் சேர்க்கப்படவில்லை.
ஆனால், அனுபவ வீரரும் 102 டி20 போட்டிகளில் பங்கேற்றவருமான ரோஸ் டெய்லர், கிராண்ட் ஹோம், இல்லாதது பெரும் அதிர்ச்சிக்குரியது.சூப்பர் ஸ்மாஷ் சீசனில் அதிகமான ரன்கள் குவித்த ஆலன் அணியில் சேர்க்கப்படவில்லை.
2014 மற்றும் 2016ம் ஆண்டில் ஹாங்காங்கிற்கு நியூஸிலாந்துக்கு தலைமை வகிக்த மார்க் சாப்மேன் உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் இஷ் சோதி, மிட்ஷெல் சான்ட்னர் இருவரோடு சேர்த்து லெக் ஸ்பின்னர் டாட் ஆஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே அணியுடன் பயணிப்பார், எந்த வீரருக்கேனும் காயம் ஏற்பட்டால் அணியில் இணைந்து கொள்ளும் விதம் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் டிரன்ட் போல்ட், கெயில் ஜேமிஸன், லாக்கி பெர்குஷன், டிம் சவுதி ஆகியோர் உள்ளனர். இதில் சவுதி தவிர்த்து மற்ற 3 வேகப்பந்துவீச்சாளர்களும் ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருப்பதால், போதுமான அளவு பயிற்சி டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகக் கிடைக்கும்.
நியூஸிலாந்து அணிக்கு விக்கெட் கீப்பர்களாக டிம் ஷீபெர்ட், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கான்வே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், தற்போது விரலில் காயம் ஏற்பட்ட போதிலும் உலகக் கோப்பைக்கு முன்பாக குணமடைந்துவிடுவார் என்பதால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மட்டும் ரோஸ் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாதம் 23-ம் தேதி நியூஸிலாந்து அணி வங்கதேசம் புறப்படுகிறது அதன்பின் பாகிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு, உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றனர்.
டி20 உலகக் கோப்பைக்கான நியூஸிலாந்து அணி:
கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), டாட் ஆஸ்டில், டிரன்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லாக்கி பெர்குஷன், மார்டின் கப்தில், கெயில் ஜேமிஸன், டேர்ல் மிட்ஷெல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபெர்ட், இஷ் சோதி, டிம் சவுதி, ஆடம் மில்னே
வங்கதேசம் டி20, பாக். ஒருநாள் தொடருக்கான அணி:
டாம் லாதம்(கேப்டன்), பின் ஆலன், ஹேமிஸ் பென்னட், டாம் பிளன்ட்வெல், டக் பிரேஸ்வெல், கோலின் டி கிரான்ட்ஹோம், ஜேகப் டப்பி, மாட் ஹென்ரி(ஒருநாள் தொடர்), ஸ்காட் குக்ளிஜின், கோலி மெக்கோன்சி,ஹென்றி நிகோலஸ், அஜாஸ் படேல், ராச்சி்ன் ரவிந்திரா, பென் சீர்ஸ்(டி20), பிளேர் டிக்னர்
பாக் டி20 தொடருக்கான நியூஸி.அணி.
டாம் லாதம்(கேப்டன்), பின் ஆலன், டாட் ஆஸ்டில், ஹேமிஸ் பென்னட், டாம் பிளன்டெல், மார்க் சாப்மேன், கோலின் டி கிரான்ட்ஹோம், மார்டின் கப்தில், மாட் ஹென்றி, டேர்ல் மிட்ஷெல், அஜாஸ் படேல், இஷ் சோதி, பென் சீர்ஸ், பிளேர் டிக்னர், வில் யங்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago