நாட்டிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது.
4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் ஒரு வி்க்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 12, புஜாரா 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்திருந்தநிைலயில் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
» டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டது: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா
சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும் பொறுமையாக ஆடிய கேப்டன் ரூட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 21-வது சதத்தை நிறைவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஷர்துல் தாக்கூர், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி்னர்.
இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. 2-வது இன்னிங்ஸை நேற்று தொடங்கிய இந்திய அணி 65 நிமிடங்கள் மட்டுமே பேட் செய்தது. ராகுல் 26 ரன்னில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் டெஸ்ட் மிகுந்த பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இந்திய அணியின் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன, வெற்றிக்கு 152 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டத்தில் முதல் ஒருமணிநேரம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
புதிய பந்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும், விக்கெட் விழுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கும். ஆதலால், முதல் ஒரு மணிநேரம் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழாமல் தடுத்து நிலைத்து நின்றுவிட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.
கேப்டன் கோலி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் 2-வது இன்னிங்ஸில் அவரின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரா செய்யும் நோக்கில் இந்திய வீரர்கள் விக்கெட்டை இழக்கக்கூடாது என்று நினைத்தால் நிச்சயம் விக்கெட்டுகளை இழந்துவிடுவார்கள், 157 ரன்களை சேஸிங் செய்யும் எண்ணத்தில் விளையாடத் தொடங்கினால், வெற்றி இந்திய அணிக்குத்தான்.
முன்னதாக இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்த நிலையில் 75 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தது. இங்கிலாந்து அணியை மழை காக்க வேண்டும் அல்லது ஜோ ரூட் வந்து மீட்க வேண்டும் என்ற ரீதியில்தான் பேட்ஸ்மேன்கள் ஆடினர். ரோரி பர்ன்ஸ்(18) வி்க்கெட்டை சிராஜூம், கிராளி(6) விக்கெட்டை பும்ராவும் கழற்றினர். 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்திருந்தது.
அதிலும் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிராஜின் பந்துவீச்சு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு ப்ளைன்ட் ஸ்பாட்டில் பந்தை பிட்ச் செய்து ஆஃப் திசையில் எடுத்துச் ெசல்லும் சிராஜின் பந்தை எதிர்கொள்ள பெரிதும் சிரமப்பட்டனர். பர்ன்ஸ் சமாளி்க்கமுடியாமல்தான் சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு ரூட், சிப்ளி சேர்ந்தனர். சிப்ளி நிதானமாக பேட் செய்ய மறுபுறம் ரூட் வேகமாக ரன்களைச் சேர்த்தார். 68 பந்துகளில் ரூட் அரைசதத்தை நிறைவு செய்தார். சிப்ளி(28) ரன்னில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருவரும் 3-வது வி்க்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து வந்த பேர்ஸ்டோ, ரூட்டுடன் சேர்ந்தார். இருவரும் விரைவாக ரன்களைச் சேர்த்த தொடங்கியபோது, பேர்ஸ்டோ 30 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒவ்வொரு 30 ரன்களுக்கும் இங்கிலாந்து அணிஒரு விக்கெட்டை இழந்து வந்தது. அடுத்து வந்த லாரன்ஸ்(25), பட்லர்(17), சாம் கரன்(32), ராபின்ஸன்(15), பிாரட்(0) என வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.
தேநீர் இடைவேளேயின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்து வலுவாகத்தான் இருந்தது. புதிய பந்து மாற்றப்பட்டவுடன் பும்ரா பந்துவீச அழைக்கப்பட்டார். அதன்பின் வி்க்கெட்டுகள் மளமளவென விழத்தொடங்கின. அடுத்த 68ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணி இழந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago