டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டது: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

By செய்திப்பிரிவு

டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டது என ஒலிம்பிக் போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரமும், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியைப் பாயவிட்டார். நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைவர்களும், பிரபலங்களும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நீரஜ் சோப்ராவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டது. நீரஜ் சோப்ரா இன்று நடத்திய சாதனை எந்நாளும் நினைவுகூரப்படும். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாக விளையாடி தனது திறனைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்