டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் தடகளப் போட்டியில் ஒலிம்பிக் களத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
ஜப்பானின் டோக்கியோ நகரில் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் இன்றைய நாள் இந்தியாவுக்கான சிறந்த நாள் என்றே சொல்ல வேண்டும். முதலில், ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவுப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
தற்போது, ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஹரியாணா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா மீது ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது.
» டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா
» சாதியைப் பற்றிப் பேசியது வெட்கக்கேடு: வந்தனாவுக்கு கேப்டன் ராணி ராம்பால் ஆதரவு
அந்த நம்பிக்கையை மெய்ப்பித்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஈட்டி எறிதல் போட்டி தொடங்கியது. இதில், முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரத்துக்கும், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியை பாயவிட்டார். நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.
தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. ஹரியாணா மாநிலம் பானிபட்டில் உள்ள அவரது வீட்டின் முன் மக்கள் தேசியக் கொடியுடன் திரண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பதக்கப் பட்டியலில் முன்னேறிய இந்தியா:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் முன்னேறியிருக்கிறது. இந்தியா சார்பில் இதுவரை நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதலில் தங்கம்), பஜ்ரங் புனியா (மல்யுத்தத்தில் வெண்கலம்), மீராபாய் சானு (பளுதூக்குதலில் வெள்ளி) பி.வி.சிந்து (பேட்மிண்டனில் வெண்கலம்), லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டையில் வெண்கலம்), ஆடவர் ஹாக்கி அணி (வெண்கலம்), ரவிக்குமார் தாஹியா (மல்யுத்தத்தில் வெள்ளி) என 7 பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
செக் வீரர் வேட்லேஜ் 86.67 மீட்டருக்கு ஈட்டியை வீசி வெள்ளிப் பதக்கமும், அதே நாட்டைச் வெஸ்ஸலி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago