முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு, ஹூசைன், ஹசனின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் டாக்காவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது வங்கதேசம் அணி.
கண்ணா லட்டு தின்ன ஆசையா….கண்ணா 2-வது லட்டு தின்ன ஆசையா என்று விளம்பரத்தில் வருவதுபோல், ஆஸ்திரேலிய அணியை அடித்து துவைக்க காத்திருந்த வங்கதேச அணிக்கு அடுத்தடுத்து டி20 வெற்றி கிடைத்துள்ளது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்துத. 122 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி முன்னிலை வகிக்கிறது. வங்கதேச அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டு வெற்றிக்குவழிகாட்டிய ஆசிப் ஹூசைன்(37) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
» ஒலிம்பிக் மல்யுத்தம்: வெள்ளி நிச்சயம், தங்கம் லட்சியம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவி குமார்
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சும் சரியில்லை, பேட்டிங்கும் சரியில்லை. ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின்பிடியில் இருந்தது, ஆட்டமும் ஆஸ்திரேலியாவின் பக்கம் சென்றது.
இதைப் பயன்படுத்தி அடுத்தடுத்து வி்க்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால், ஆட்டம் முடிந்திருக்கும். ஆனால், ஹூசைனையும், நுருல் ஹசனையும் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறியதால், வெற்றி வாய்ப்பு பறிபோனது.
ஆஸ்திரேலிய அணியில் இந்தமுறையும் மார்ஷ் மட்டுமே ஒழுங்காக பேட் செய்து 45ரன்கள் சேர்த்தார், அவருக்கு துணையாக ஹென்ரிக்ஸ்30 ரன்கள் சேர்த்தார். முதல்போட்டியைப் போல் இந்த ஆட்டத்திலும் வேறு எந்த பேட்ஸ்மேனும் ரன் சேர்க்காமல் சொதப்பினர். கடைசி 5 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி.
88 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த, 33 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒட்டுமொத்தத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சோதனைக் கூட எலிகள் போல் இந்த அணியை வங்கதேசத்துக்கு அனுப்பி வைத்துள்ளதுபோல் தெரிகிறது.
வங்கதேசத்தரப்பில் முஸ்தபிரசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், சோரிபுல் இஸ்லாம் 2 வி்க்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
122 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. ஸ்டார்க், ஹேசல்வுட் வேகத்தில் நமீம்(9), சர்க்கார்(0) விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு சஹிப் அல் ஹசன், மெஹதி ஹசன் இருவரும் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.
சஹிப் 26 ரன்னிலும், மெஹதி 23 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் மகமதுல்லாவும் வந்தவேகத்தில் டக்அவுட்டில் வெளியேறினார். 67 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைஇழந்து வங்கதேச அணி தடுமாறியது.
6-வதுவிக்கெட்டுக்கு ஹூசைன், ஹசன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இருவரையும் பிரிக்க முடியாமல் 12 ஓவரிலிருந்து ஆஸ்திரேலிய அணியினர்பல முயற்சிகள் செய்தனர்.
ஆனால், இரு இளம் வீரர்களும் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி 8 பந்துகள் மீதமிருக்கையில் அணிக்கு வெற்றித் தேடித்தந்தனர்.ஹூசைன் 37ரன்னிலும், ஹசன்22 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள்சேர்த்தனர்.
18.4 ஓவர்களி்ல் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு123 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago