ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்துள்ளது.
வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் 2023ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன.
இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான போட்டி அட்டவணை மற்றும் தேதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் 2-ம் கட்ட லீக் ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி ஆர்சிபி அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் நிறைவடைகிறது.
மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் ஐபிஎல் டி20 போட்டிகள் நடக்கும் அதே மைதானத்தில்தான் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளும் நடக்க இருப்பதால், அதற்காக ஆயத்தமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுகுறி்த்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “ ஐபிஎல் டி20 தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் பங்கேற்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பேசி, ஒப்புதலை ஜெய்ஷா பெற்றுள்ளார்” எனத் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளில் ஏராளமான இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்றுள்ளதால், அவர்களின் வருைக உறுதி செய்யப்பட்டது தொடருக்கு ேமலும் உற்சாகத்தை அளிக்கும்.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிஜாமுதின் சவுத்ரி கூறுகையி்ல் “ டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின், இங்கிலாந்து அணியுடன் ஒருநாள், டி20 தொடரை விளையாடுவது குறித்து பேச்சு நடத்தப்பட்டு திட்டமிடப்படும். இரு அணிகளும் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஏராளமான கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
ஆதலால், இந்தத் தொடரை உலகக் கோப்பை முடிந்தபின் எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு பின் நடத்தப்பட்டால் எங்கு நடத்துவது என முடிவு செய்யப்படும். இரு அணிகளுக்கும் உலகக் கோப்பை தொடர் முடிந்தபின் அடுத்தடுத்து தொடர்கள் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.
27 நாட்கள் நடக்கும்போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன. துபாயில் தகுதிச்சுற்று(அக்.10) மற்றும் இறுதி ஆட்டம் உள்பட 13 ஆட்டங்களும், ஷார்ஜாவில் 10 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் தொடக்க ஆட்டம்(செப்.24), தகுதிச்சுற்று 2வது ஆட்டம்(அக்.11), மற்றும் எலிமினேட்டர்(அக்.13) சுற்றும் நடக்கிறது. அபுதாபியில் 8 ஆட்டங்கள் நடக்கின்றன.
அக்டோபர் 8ம்தேதி ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் லீக் ஆட்டங்கள் முடிகின்றன
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago