வங்கதேசத்துடன் டி20: ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

By பிடிஐ

வங்கதேசத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியஅணிக்கு புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகளி்ல் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் நாளை தாகாவில் நடக்கிறது.

இதில் ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான கேப்டன் ஆரோன் பின்ச், காயம் காரணமாக, மே.இ.தீவுகள் தொடரின்போதே பயோ-பபுள்சூழலில் இருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுவிட்டார். தற்போது சிகிச்சையில் இருப்பதால், டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவருக்குப் பதிலாக புதிய கேப்டனாக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேத்யூ வேட்

அதேநேரம் அக்டோபர் மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஆரோன் பின்ச் காயத்திலிருந்து மீண்டுவிடுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆரோன் பின்ச்சுக்கு பதிலாக ஒருநாள் அணிக்கு கேப்டன் பொறுப்பை அலெக்ஸ் கேரே எடுத்து,மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் வழிநடத்தி, 2-1 என்ற கணக்கில் வென்றார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் அலெக்ஸ் கேரே ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாக களமிறங்குவார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள உள்நாட்டு அணிகளான விக்டோரியா, தாஸ்மானியா, ஹோபர்ட் ஹரிகன்ஸ் ஆகியஅணிகளுக்கு கேப்டன் பொறுப்பேற்று செயல்பட்ட அனுபவம் மேத்யூ வேட்டுக்கு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணி விவரம்:
ஆஸ்டன் அகர், வீஸ் அகர், ஜேஸன் பெஹரன்டார்ப், அலெக்ஸ் கேரே, டேன் கிறிஸ்டியன், ஜோஸ் ஹேசல்வுட், மோய்சஸ் ெஹன்ரிக்ஸ், மிட்ஷெல் மார்ஷ், பென் மெக்டெர்மாட், ரிலே மெரிடித், ஜோஸ் பிலிப், மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஸ்வீப் ஸன், ஆஸ்டன் டர்னர், ஆன்ட்ரூ டை, மேத்யூ வேட்(கேப்டன்) ஆடம் ஸம்பா.

வங்கதேச அணி விவரம்

மகமதுல்லா(கேப்டன்), சவுமியா சர்க்கார், நயம் ஷேக், சகிப் அல் ஹசன், நுருல் ஹசன் சோஹன், அபிப் ஹோசைன், ஷமிம் ஹூசைன், ஷைபுதின், தஸ்கின் அகமது, சோரிபுல் இஸ்லாம், நசும் அகமது, ஷேக் மெகதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், முஸாடக் ஹூசேன் சைகத், ரூபெல் ஹூசைன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்