டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்

By இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி தனது கனவு பார்மில் இருந்து வருகிறார். இந்நிலையில் டி20 தொடரில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய டி20 கேப்டனும், தொடக்க வீரருமான ஏரோன் பிஞ்ச்சை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார்.

மூன்று டி20 போட்டிகளில் 90 நாட் அவுட், 59 நாட் அவுட், 50 ஆகிய ஸ்கோர்களை எடுத்தார் விராட் கோலி. இதன் மூலம் 47 தரவரிசைப் புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று முதலிடம் சென்றார்.

டேவிட் வார்னர் 6 இடங்கள் பின்னடைவு கண்டு 18-வது இடத்துக்குச் சரிந்தார். பந்துவீச்சில் முதல் இரண்டு இடங்களில் சுனில் நரைன், சாமுயெல் பத்ரீ ஆகிய மே.இ.தீவுகளின் பவுலர்கள் உள்ளனர்.

அணிகள் தரவரிசையில் 8-ம் இடத்தில் இருந்த இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற, ஆஸ்திரேலியா 8-ம் இடத்துக்குச் சரிந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE