இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளார். ஆஸ்திேரலிய டெஸ்ட் தொடருக்குப்பின் அணியில் வாய்ப்புக் கிடைக்காமல் தவித்த பிரித்வி ஷா 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
மே.வங்கத்தைச் சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன் காத்திருப்பு வீரராக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பிரதான அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரன்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது.
» ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆனால், இந்திய வீரர்கள் ஷுப்மான் கில், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோருக்கு ஏற்பட்ட காயத்தால் 3 பேரும், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டு இதில் ஷூப்மான் கில் காயமடைந்து தொடரிலிருந்து விலகினார். இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தனர்.
இந்த 3 வீரர்களுக்குப் பதிலாக எந்த 3 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்று பிசிசிஐ வாரியம் ஆலோசித்து வந்தநிலையில் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள தவண் தலைமையிலான இந்திய அணியிலிருந்து 2 வீரர்களை இலங்கை அனுப்ப பிசிசிஐ வாரியம் முடிவு செய்துள்ளது.
இதில் நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்த சூர்யகுமார் யாதவையும், தொடக்க வீரருக்காக பிரித்வி ஷாவையும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில், “ அனைத்து இந்திய சீனியர் தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் இருவரும் இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் சேர உள்ளனர். ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வலது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது, இந்தக் காயம் குணமடைய நீண்டநாட்கள் தேவைப்படும் என்பதால் அவரும் உடற்தகுதி பெறவில்லை அவரும் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ்கானுக்கு பயிற்சி ஆட்டத்தின் போது, இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், ஆவேஷ்கானும் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியுள்ளார்.
கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்த ரிஷப் பந்த் குணமடைந்து, இரு நெகட்டிவ் பரிசோதனைக்குப்பின் அணியில் இணைந்துள்ளார், விரைவில் பயிற்சியில் ஈடுபட உள்ளார். பந்துவீச்சுப்பயிற்சியாளர் பரத் அருண், விருதிமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன்ஆகியோர் லண்டனில் தனிமைப்படுத்தும் காலத்தை முடித்துவிட்டனர், விரைவில் அணியில் இணைவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் இந்தியஅணியில் பயோபபுள்சூழலில் சூர்யகுமார் யாதவும், பிரித்வி ஷாவும் இருப்பதால், பயோ-பபுள் டிரான்ஸ்பர் முறையில் லண்டனுக்குச் செல்வார்கள். இதனால், லண்டன் சென்று கடுமையான தனிமைக் காலத்தில் இருக்க வேண்டியதில்லை. பிசிஆர்பரிசோதனை மட்டும் எடுத்துக்கொண்டாலே போதுமானது.
இந்திய டெஸ் அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணைக் கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், விருதிமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.
காத்திருப்பு வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, அர்ஜன் நாகஸ்வாலா
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago