கொழும்பு நகரில் இன்று நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், புதிய உலக சாதனையை நிகழ்த்தும்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து ஒருநாள், டி20 தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஷிகர் தவண் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று பகலிரவாக நடக்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால், இலங்கை அணிக்கு எதிராகத் தொடர்ந்து 9-வது முறையாகத் தொடரைக் கைப்பற்றிய பெருமையை இந்திய அணி படைக்கும். கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி வருகிறது.
» 14 ஆண்டு சாதனையைத் தக்கவைக்குமா இந்திய அணி? நாளை இலங்கையுடன் 2-வது மோதல்
» ஒலிம்பிக் நினைவலைகள் 2: ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி!
ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்ற வகையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்திய அணிகள் சமநிலையில் உள்ளன. இலங்கை அணிக்கு எதிராக இதுவரை 92 வெற்றிகளை இந்திய அணி வென்றுள்ளது. இதேபோல் பாகிஸ்தான் அணியும் 92 வெற்றிகளை இலங்கை அணிக்கு எதிராகப் பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக 92 வெற்றிகளை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.
92 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுடன், இந்திய அணியும் சமநிலையில் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்றால், 93-வது வெற்றியைப் பெற்று உலக சாதனை படைக்கும். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெறும்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல், வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சாதனையை சமன் செய்யவும் இன்று வாய்ப்புள்ளது. சஹல் இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 100 விக்கெட்டுகளை வீழ்த்த சஹலுக்கு 6 விக்கெட்டுகள் மட்டும்தான் தேவை. இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் பட்டியலில் ஷமியுடன் சஹல் சேர்வார்.
வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 56 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருவேளை சஹல் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை எடுக்க முடியாமல், 3-வது போட்டியில் எடுத்தால், 57 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து கொள்வார். பும்ரா 57 ஒருநாள் ஆட்டங்களில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago