‘யுனிவர்ஸ் பாஸ்’ வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள்; நான் வந்தாலே போதும், ரன் அடிக்க வேண்டாம்: கிறிஸ் கெயில் கலகல

By செய்திப்பிரிவு

'யுனிவர்ஸ் பாஸ்' என்ற வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். நான் களமிறங்கினாலே போதும். ரன் அடிக்க வேண்டியதில்லை. ரசிகர்கள் என்னை ரசிக்கிறார்கள் என்று மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் ஜாலியாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் அணி அபாரமாகக் கைப்பற்றியது. முதல் இரு போட்டிகளில் 13, 6 ரன்களில் கெயில் ஆட்டமிழந்த நிலையில் அவரின் ஃபார்ம் குறித்துக் கவலை எழுந்தது.

ஆனால், 3-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியைப் புரட்டி எடுத்த கெயில் 38 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து வெற்றிக்குக் காரணமானார். கெயில் கணக்கில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் கெயில் 67 ரன்கள் சேர்த்ததன் மூலம் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

இந்த வெற்றிக்குப் பின் கிறிஸ் கெயில் கலகலப்பாகப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''என்னுடைய மிகப்பெரிய கிரிக்கெட் பயணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை நாங்கள் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் நிகோலஸ் பூரணுக்குத் துணையாக இருந்து இந்தத் தொடரை வென்று கொடுத்தேன்.

பொலார்ட் விளையாடாவிட்டாலும், வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றி வருகிறார். நான் பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த ஆட்டத்தில் ரன் அடித்திருக்கிறேன்.

இந்த அரை சதத்தை மே.இ.தீவுகளுக்கும், என்னுடைய அணியினருக்கும், குறிப்பாக பொலார்டுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப் போட்டிக்கு முன்பாக அணியில் சிறிய கூட்டம் நடத்தப்பட்டது. அப்போதுதான் நான் அணிக்குள் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரிந்தது. என்னுடைய கருத்தைத் தெரிவிக்க பொலார்ட் கூறினார். எனக்கு உற்சாகம் தரக்கூடிய வகையில் பேசிய பொலார்டுக்கு நன்றி. சில நேரங்களில் நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர் என்பது முக்கியமில்லை, உற்சாகமாக இருக்க சில வார்த்தைகள் தேவை.

அணியில் உள்ள சீனியர் வீரர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்தார்கள். அவர்களின் வலிமை, ஒற்றுமையால்தான் தொடரை வெல்ல முடிந்தது.

என்னுடைய குறிக்கோள் டி20 உலகக் கோப்பைதான். ரன்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கெயில் ரன் அடிக்கமாட்டார், அவருக்கு 42 வயதாகப் போகிறது. கெயில் ரன் அடிப்பதில்லை என்று வர்ணனையாளர்கள் புள்ளிவிவரங்களைப் பேசுகிறார்கள்.

ஆனால், கெயில் களத்துக்குள் வந்தாலே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், உற்சாகமாகிறார்கள். 'யுனிவர்ஸ் பாஸ்' என்ற வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். நான் பேட்டில் 'யுனிவர்ஸ் பாஸ்' என்ற வார்த்தையை எழுத ஐசிசி விரும்பவில்லை.

ஆதலால், 'தி பாஸ்' என்று போட்டுக்கொண்டேன். கிரிக்கெட் விளையாடுவோம், மகிழ்ச்சியாக இருப்போம். மே.இ.தீவுகளுடனும், இளைஞர்களுடனும் சேர்ந்து அந்தத் தருணத்தை அனுபவிப்போம்''.

இவ்வாறு கெயில் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்