ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது அயர்லாந்து அணி. டப்லின் நகரில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அயர்லாந்து அணி.
அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றிலும் அயர்லாந்து அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் சேர்த்தது. 291 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 48.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 43 ரன்களில் தோல்வி அடைந்தது.
» விக்கெட் எடுக்கத் தத்தளித்த அஷ்வின், கிண்டல் செய்த சர்ரே அணி
» க்றிஸ் கெய்ல் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி தொடரை வென்ற மே.தீவுகள் அணி
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது. வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லாவிட்டால், ஒருநாள் தொடரை முதல் முறையாக அயர்லாந்து அணி வென்றுவிடும்.
அபாரமாக ஆடி சதம் அடித்த அயர்லாந்து அணியின் கேப்டன் ஆன்டி பால்பிர்னி ( 102) ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவருக்குத் துணையாக நடுவரிசை வீரர் ஹேரி டெக்டர் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். ஜார்ஜ் டாக்ரெல் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஒரு காலத்தில் தென் ஆப்பிரிக்க அணியைப் பார்த்தாலே சர்வதேச அளவில் பேட்ஸ்மேன்கள் அலறுவார்கள். திறமையான பந்துவீச்சாளர்களான டொலான்ட், டிவில்லியர்ஸ், ஷான்போலக், ஸ்டெயின், காலிஸ், மெக்மிலன் போன்றோர் இருந்த அணியா மோசமான தோல்வியைச் சந்தித்தது என வியப்பாக இருக்கிறது.
பேட்டிங்கிலும் திறமையானவீரர்கள் ஹன்சி குரோனியே, ரோட்ஸ், கல்லினன், மெக்மிலன், சிம்காக்ஸ், ஹட்ஸன், கிப்ஸ், கிறிஸ்டன், டிவில்லியர்ஸ், காலிஸ், போலக் போன்றோர் சர்வதேச அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்கள். ஆனால், அவர்களின் தடத்தைப் பின்பற்றாமல்இப்படி மோசமான தோல்வியைச் சந்திப்பது வேதனைக்குரியது
அனுபவம் மிகுந்த அணி, சர்வதேச அளவில் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் நேற்று ஒட்டுமொத்தமாகச் சொதப்பியது.. தென் ஆப்பிரிக்க அணியில் ஆன்ட்ரிச் நார்ஜே, ரபாடா, பெலுக்வாயே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தும், அயர்லாந்து ரன் குவிப்பைத் தடுக்க முடியவில்லை. ஐபிஎல் தொடரில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி திணறவிட்ட நார்ஜே, ரபாடா பந்துவீச்சு நேற்று எடுபடவில்லை.
ரபாடா, நார்ஜே, பெலுக்வாயே ஆகிய மூவரின் பந்துவீச்சையும் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் ஈவு இரக்கம் பார்க்காமல் நொறுக்கி அள்ளிவிட்டனர்.
பேட்டிங்கிலும் தென் ஆப்பிரிக்க அணியில் அனுவம் இல்லா வீரர்களே இருக்கிறார்கள், நிலைத்தன்மையை வெளிப்படுத்தும் வித்தில் பேட் செய்யவில்லை. டேவிட் மில்லர் மட்டுமே ஓரளவுக்கு அனுபவமுள்ள வீரர். மற்றவர்களான வெரினே, டூசென், மலான், மார்க்ரம், கேப்டன் பவுமா ஆகியோரின் ரெக்கார்டுகள் பெரிதாக இல்லை. அயர்லாந்து அணிதானே என்ற மிதப்புடன் தென் ஆப்பிரிக்க அணி பயணம் செய்தமைக்குத் தகுந்த அடி கிடைத்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பைக்கான புள்ளிப்பட்டியலில், தற்போது இந்தத் தோல்வியால் தென் ஆப்பிரிக்க அணி 11-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 290 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மலான், மார்க்ரம் ஆட்டத்தைத் தொடங்கினர். மார்க்ரம் 5 ரன்னிலும், கேப்டன் பவுமா 10 ரன்னிலும் வெளியேறினர். 3-வது விக்கெட்டுக்கு டூசென், மலான் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சேர்ந்து 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
நிதானமாகப் பேட் செய்த மலான் 84 ரன்கள் ( 4 சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டூசென் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி 6 ஓவர்களில் 92 ரன்கள் அடிக்க வேண்டும்,கைவசம் 4 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா வசம் இருந்தது. ஆனால், நடுவரிசை, கடைசி வரிசை பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோல்வியைத் தழுவியது. பெரினே (13), மில்லர் (24), பெலுக்வாயே (2) மகாராஜ் (17), ரபாடா (16) நார்ஜே (10) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.
159 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி 201 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. ஏறக்குறைய 42 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 48.3 ஓவர்களில் 247 ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. அயர்லாந்து தரப்பில் மெக்பிரையன், ஆதிர், லிட்டில் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago