விக்கெட் எடுக்கத் தத்தளித்த அஷ்வின், கிண்டல் செய்த சர்ரே அணி

By ஐஏஎன்எஸ்

இங்கிலிஷ் கவுன்டி போட்டியில் விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சங்திரன் அஷ்வின் விக்கெட் எடுக்க தத்தளித்ததை, அவர் ஆடி வரும் சர்ரே அணியே கிண்டல் செய்துள்ளது.

இங்கிலாந்தின் உள்ளூர் அணிகள் ஆடும் கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் சர்ரே அணியில் ஆட இந்திய அணியின நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சோமர்செட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய அஷ்வினுக்கு முதல் இன்னிங்ஸில் ஏமாற்றமே மிஞ்சியது. 43 ஓவர்கள் வீசிய அஷ்வின் 99 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் இரண்டாவது நாள் அவருக்கு விக்கெட் விழவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் டாம் லேமன்பாய் விக்கெட்டை பவுல்டாக்கி வீழ்த்தினார்.

இதில் முதல் பகுதி ஆட்டம் முடியும் வரை அஷ்வின் விக்கெட் எடுக்கவில்லை. இதனால் ஃபீல்டிங் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்த சர்ரே அணியின் ட்விட்டர் பக்கம், 'இன்னும் விக்கெட் எடுக்கவில்லை' என்று குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜியோடு குறிப்பிட்டுள்ளது. அஷ்வின் ஆடும் அணியே அவரைக் கிண்டல் செய்வது பலருக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்