க்றிஸ் கெய்ல் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி தொடரை வென்ற மே.தீவுகள் அணி

By ஏஎன்ஐ

க்றிஸ் கெய்லின் அதிரடி ஆட்டமும், கேப்டன் நிக்கலஸ் பூரானின் நிலையான ஆட்டமும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்ல உதவியாய் இருந்தது.

5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 3-0 என்கிற கணக்கில் மே.தீவுகள் அணி முந்துவதோடு தொடரையும் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் ஐந்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அதிக ஸ்கோரை எட்ட முடியவில்லை.

மே.இந்திய தீவுகள் அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 141 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது இன்னிங்ஸை முடிந்தது. இலக்கை விரட்டிய மே.இந்திய தீவுகள் அணியோ, 31 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது.

மே.இந்திய தீவுகள் பேட்டிங்கில் முதல் ஓவரிலேயே மிட்சல் ஸ்டார்க் ஆண்ட்ரே ஃப்ளெட்சரை வீழ்த்தினார். இதன் பின் லெண்டல் சிம்மன்ஸும், க்றிஸ் கெய்லும் சேர்ந்து 38 அரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர். ரைலி மெரிடித் சிம்மன்ஸ் விக்கெட்டை வீழ்த்த ஆறு ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மே.தீவுகள் இழந்திருந்தது.

ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல், இந்தப் போட்டியில் தனது ஃபார்மை திரும்பப் பெற்றார். ஆஸியின் பந்துவீச்சை சிதறடிக்க இல்லை நோக்கி மே.தீவுகள் அணி வேகமாக முன்னேறியது. குறிப்பாக தனது அரை சதத்தை எட்ட மூன்று சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசினார் கெய்ல்.

12வது ஓவரில் எடுத்திருந்த கெய்ல் ஆட்டமிழந்திருந்தாலும் அந்தக் கட்டத்தில் 8 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்கிற சூழலுக்கு ஆட்டம் சென்றுவிட்டது. இதன் பின் கேப்டன் பூரனும், ஆண்ட்ரே ரஸலும் சேர்ந்து 15வது ஓவருக்குள் இலக்கை விரட்டி முடித்தனர்.

இந்தப் போட்டியில் 67 ரன்கள் எடுத்த கெய்ல், டி20 போட்டிகளில் 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE