50 ஆண்டுகள் காத்திருப்பு: யூரோ கோப்பையை வென்று முத்தமிட்டது இத்தாலி: ஹீரோ டோனாருமா; பெனால்டிசூட்டில் இங்கிலாந்து பரிதாபத் தோல்வி

By க.போத்திராஜ்


52 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று 2-வது முறையாக கோப்பையை ஏந்தி முத்தமிட்டது இத்தாலி அணி.

கடந்த 1968ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்றபின் இத்தாலி அணியால் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்த நிைலயில் 52 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை வென்றுள்ளது.

லண்டன் வெம்ப்ளி அரங்கில் நேற்று நடந்த யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பெனால்டி சூட்அவுட்டில் 2-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சாம்பியனானது இத்தாலி.

இத்தாலி அணியின் கோல்கீப்பர் டோனாருமா அருமையாக 3 கோல்களைத் தடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அதேபோல, இத்தாலி வீரர் லியானார்டோ போனுஸி ஆட்டநேரத்தில் ஒரு கோலையும், பெனால்டி சூட்டில் ஒரு கோல் என இரு கோல்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து ரசிகர்கள் கடந்த 1966ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபின் தங்கள் நாட்டு அணி எந்தக் கோப்பையையும் பெரிதாக வெல்வில்லை என்பதால் யூரோ கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்புடன் இருந்தனர். யூரோ கோப்பையைில் கடந்த 1968-ம் ஆண்டு 3-வது இடம் பிடித்த இங்கிலாந்து அதன்பின் இறுதிப்போட்டிக்குக் கூட தகுதி பெற்றது இல்லை.

யூரோ கோப்பை இறுதிப்போட்டிக்கே இந்தமுறைதான் இங்கிலாந்து அணி தகுதி பெற்றதால், அந்தநாட்டு ரசிகர்களும், இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் ஆர்வத்துடன் இருந்தனர். இங்கிலாந்து அணியினருக்கு ராணி எலிசபெத்தும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். ஆனால், இங்கிலாந்துக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால், இங்கிலாந்து அணிக்கு ஆறுதலாக , அந்த அணி வீரர் லூக் ஷா ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடம் 57 வினாடிகளில் கோல் அடித்து யூரோ கோப்பையில் அதிவிரைவாக கோல் அடித்த வீரர் எனும் சாதனையைப் பதிவு செய்தார்.

இங்கிலாந்து வீரர் லூக் ஷா ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அடித்த கோலால், அந்த அணி முதல்பாதி வரை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில்தான் இருந்தது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஆனால், 2ம் பகுதியில் இத்தாலி வீரர்கள் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தனர்.

ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் போனுஸி கோல் அடித்து கோல் கணக்கை 1-1 என்று சமன் செய்தார். அதன்பின் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை. இதைத்தொடர்ந்து பெனால்டி சூட் முறை கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி சூட் முதல்வாய்ப்பில் இத்தாலி வீரர் பெரார்டியும், இங்கிலாந்து தரப்பில் கேப்டன் கேனும் கோல் அடித்தனர். 2-வது வாய்ப்பில் இத்தாலி வீரர் பெலோட்டி அடித்த கோலை இங்கிலாந்து கோல் கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால், இங்கிலாந்து வீரர் மெக்குயர் கோல் அடிக்கவே 2-1 என்று முன்னிலை பெற்றது.
3-வது வாய்ப்பில் இத்தாலி வீரர் பெனுஸி கோல் அடித்தார், ஆனால், இங்கிலாந்து வீரர் ராஷ்போர்ட் அடித்த கோலை இத்தாலி கோல்கீப்பர் டோனாரூமா தடுத்துவிட்டார்.

4-வது வாய்பில் இத்தாலி வீரர் பெமார்டெஷி கோல் அடிக்க, இங்கிலாந்து வீரர் சான்சோ அடித்த கோலை டோனாரூமா தடுத்தார். கடைசி வாய்ப்பில் இத்தாலி வீரர் ஜோர்ஹின்ஹோ அடித்த கோலை இங்கிலாந்து கோல் கீப்பர் தடுத்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

இங்கிலாந்து அணிக்கு கடைசிவாய்ப்பில் புகாயோ சாகா அடித்த கோலை, கோல்கீப்பர் டோனாரூமா தடுக்கவே வெற்றி இத்தாலி வசமானது.

இங்கிலாந்து வீரர்கள் அடித்த 3 பெனால்டி சூட் கோல்களையும் தடுத்த இத்தாலி கோல்கீப்பர் டோனாரூமா ஹீரோவாகி வெற்றிக்குக் காரணமாகினார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பைக்கே தகுதி பெறாமல் தலைகுணிந்து இத்தாலி அணி கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக வெளியேறியது.

ஆனால், இன்று ஐரோப்பாவில் மிகச்சிறந்த அணி என்ற பெருமையுடன் இத்தாலி தலைநிமிர்ந்து பீடுநடைபோடுகிறது. காலச்சக்கரம் சுழன்றுவிட்டது, அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 34 போட்டிகள் தோல்வி அடையாமல் வந்துள்ள அணி என்ற பெருமையையும் கேப்டன் ராபர்டோ மான்சினி தலைமையில் பெற்றுள்ளது.

இங்கிலாந்து இந்தப் போட்டி மட்டுமல்ல, இதற்கு முன் 1990, 1996, 1998, 2004, 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஆட்டத்திலும் பெனால்டி சூட்டில் தோல்வி அடைந்துள்ளது.

இத்தாலி அணி லீக் சுற்றில் துருக்கி, ஸ்விட்சர்லாந்து அணிகளை தலா 3 கோல் கணக்கிலும், வேல்ஸ் அணியை 1-0 என்ற கோல்கணக்கிலும் வென்றது. நாக்அவுட் சுற்றில் ஆஸ்திரிய அணியை 1-2 என்ற கோல்கணக்கில் இத்தாலி அணி தோற்கடித்தது.

காலிறுதியில் பெல்ஜியம் அணியை 1-2 என்ற கோல்கணக்கிலும், அரையிறுதியில், ஸ்பெயின் அணியை பெனால்டி சூட்டில் 2-4 என்ற கோல் கணக்கிலும் துரத்தி இறுதிப்போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.

இத்தாலி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அதில் இருமுறை கோப்பையை வென்றுள்ளது. இதற்கு முன் 2000ம் ஆண்டிலும், 2012ம் ஆண்டிலும் இறுதிப் போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெற்றது. அப்போது 2000ம் ஆண்டில் பிரான்ஸிடமும், 2012ம் ஆண்டில் ஸ்பெயினிடமும் இத்தாலி தோல்வி அடைந்தது. 2012ம் ஆண்டு அடைந்த தோல்விக்குத்தான் 10 ஆண்டுகளுக்குப்பின் ஸ்பெயினை பழிதீர்த்தது இத்தாலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்