விம்பிள்டன் டென்னிஸ்: ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் : போராடி வீழ்ந்தார் பில்ஸ்கோவா

By ஏஎன்ஐ


லண்டனில் நடந்துவரும் கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கரோனாலினா பில்ஸ்கோவாவை வீழ்த்தி இந்த பட்டத்தை பார்டி கைப்பற்றினார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டியை எதிர்த்து செக் குடியரசு வீராங்கனை கரோலினா பில்ஸ்கோவா மோதினார்.

இந்த ஆட்டத்தில் பில்ஸ்கோவாவை, 6-4, 6-7, 6-3 என்ற செட்களில் போராடி வீழ்த்தி மகுடத்தைகைப்பற்றினால் பார்டி. கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின் விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 3 செட்கள் நடப்பது இதுதான் முதல்முறையாகும்.

9 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ராண்ட்வான்ஸ்கா இடையிலான ஆட்டம் 3 செட்களை கொண்டதாக இருந்தது. அதன்பின் இந்த ஆட்டம் அமைந்துள்ளது.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய பார்டி 5-2 என்ற கேம் கணக்கில் முன்னிலையில் இருந்தார். அதன்பின் பில்ஸ்கோவா முன்னேற முயன்றாலும் முடியவி்ல்லை. இதனால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பார்டி கைப்பற்றினார்.

2-வது செட்டில் பில்ஸ்கோவா ஆதிக்கம் செலுத்தினால், இருப்பினும் பார்டியும் கடும் நெருக்கடி கொடுத்தபோதிலும் 6-7 என்ற கணக்கில் பில்ஸ்கோவா வென்றார். வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி செட்டில் இருவரும் கடுமையாக மோதினர். ஆனால், பார்டியின் நுணுக்கமான ஷாட்கள், ப்ளேஸ்கள், ஏஸ்களை சமாளிக்க முடியாமல் 6-3 என்ற கணக்கில் பில்ஸ்கோவா தோல்வி அடைந்தார்.

ஆஷ்லி பார்டிக்கு இது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் கடந்த 2019ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற பார்டி, இப்போது விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்